Published : 21 Oct 2019 10:35 AM
Last Updated : 21 Oct 2019 10:35 AM
திருநெல்வேலி
இடைத்தேர்தல் நடைபெற்றுவரும் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் 113 கிராமங்களில் வசிக்கும் மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக அந்தந்த ஊர்களின் நாட்டாமைகள் தெரிவித்துள்ளனர். இதனால் 69 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
காரணம் என்ன?
பட்டியல் இனத்தைச் சேர்ந்த 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வலியுறுத்தி தேர்தலை 113 கிராமங்கள் புறக்கணித்துள்ளன. 69 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்று 113 கிராமங்களின் நாட்டாமைகள் தெரிவித்துள்ளனர்.
பெருமாள்புரம், தாமரைக்குளம், கடம்பங்குளம் உள்ளிட்ட 4 கிராமங்களில் மக்கள் வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். ஆனால், போலீஸ் தரப்பிலோ வெறும் 4, 5 கிராமங்களில்தான் தேர்தல் புறக்கணிப்பு இருக்கிறது. மற்றபடி வாக்குப்பதிவு நடந்து வருகிறது எனக் கூறப்படுகிறது.
நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன் உட்பட 23 பேர் களத்தில் உள்ளனர். 1,27,389 ஆண் வாக்காளர்கள், 1,29,748 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர், சர்வீஸ் வாக்காளர்கள் 278 பேர் என மொத்தம் இத்தொகுதியில் 2,57,418 வாக்காளர்கள் உள்ளனர்.
காலை 9 மணி நிலவரப்படி நாங்குநேரியில் 18.04% வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT