Published : 21 Oct 2019 08:37 AM
Last Updated : 21 Oct 2019 08:37 AM
சென்னை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கண்காணிப்பு கேமரா வளையத் துக்குள் சென்னை நகரம் கொண்டு வரப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடும் பிக்பாக்கெட் கொள்ளையர்களை கைது செய்ய 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இதற்காக கடைவீதிகளில் அதிக அளவில் மக்கள் கூடுவார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தீபா வளிக்கு தேவையான பொருட் களை வாங்க மக்கள் கடைவீதிக்கு அதிக அளவில் சென்றனர்.
இதைத் தொடர்ந்து சென்னை யில் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன் தீவிரப்படுத்தி இருந்தார். கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு மற்றும் பிக்பாக்கெட்டில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்க தியாகராய நகரில் 1,142 கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.
மேலும் ஆளில்லா குட்டி விமா னம் (ட்ரோன்) மூலமும் கண் காணிக்கப்பட்டது. பழைய குற்ற வாளிகளின் நடமாட்டத்தைக் கண் காணிக்க ‘ஃபேஸ் டேக்கர் கேமரா’ என்னும் அதி நவீன கேமராக்கள் போத்தீஸ் அருகில், ரங்கநாதன் தெரு மற்றும் மாம்பலம் ரயில் நிலையம் அருகே என 3 இடங்களில் பொருத்தப்பட்டிருந்தன.
மேலும் 3 தற்காலிக கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் மீது நின்றவாறு தொலை நோக்கி கருவி மூலம் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும், சீருடையில் கேமரா பொருத்தியவாறு ரோந்து பணி யிலும் ஈடுபட்டனர். தேவைக்கு தகுந்தவாறு சில இடங்களில் போக்குவரத்திலும் சில மாற்றங் களை செய்திருந்தனர். மேலும் ஒலி பெருக்கி மூலம் வாகனங்கள் மற்றும் பொது மக்கள் செல்வதற்கு அறிவுரைகள் வழங்கினர். தியாக ராய நகரில் மட்டும் 500 போலீ ஸார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல் புரசைவாக்கத்தில் டவுட்டன் சந்திப்பு, வெல்கம் ஓட்டல் சந்திப்பு மற்றும் வெள்ளாளர் தெரு சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந் தனர். அங்கு பொருத்தப்பட்டிருக் கும் கண்காணிப்பு கேமரா பதிவு களை ஆய்வு செய்ய தனி குழு அமைக்கப்பட்டிருந்தது. இங்கும் 3 தற்காலிக கண்காணிப்பு கோபு ரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
வேளச்சேரியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஓர் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 50 போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 100 அடி சாலை, தர மணி லிங்க் சாலை, விஜிபி செல்வா நகர், புவனேஸ்வரி நகர், விஜய நகர் பேருந்து நிலையம் மற்றும் முக்கியமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்லாம் சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்புப் பணி நடை பெறுகிறது.
தேவைப்படும் இடங்களில் பாத சாரிகள் நடந்து செல்ல தடுப்பு கள் அமைக்கப்பட்டு விபத்து ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதுமட்டும் அல்லாமல் வண்ணாரப்பேட்டை யில் 150 போலீஸார் ரோந்து பணி யில் ஈடுபட்டுள்ளனர். பூக்கடையில் 110-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத் துள்ளனர்.
அண்ணாநகர் காவல் மாவட்டத் தில் கோயம்பேடு பேருந்து நிலை யம், சிஎம்பிடி, மதுரவாயல் மற் றும் திருமங்கலம் காவல் நிலை யம் உள்ளிட்ட பகுதிகளில் 650 போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இதேபோல் மாதவரம் பகுதி உட்பட மக்கள் அதிகம் கூடிய அனைத்து இடங்களிலும் போலீ ஸார் கண்காணிப்பு பணியை நேற்று தீவிரப்படுத்தி இருந்தனர். இதுதவிர சென்னை முழுவதும் நேற்று மட்டும் 12 ஆயிரம் போலீ ஸார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT