Published : 16 Jul 2015 08:40 AM
Last Updated : 16 Jul 2015 08:40 AM

கச்சா எண்ணெய், நிலக்கரி எடுப்பதால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தை தடுக்க பத்திரிகைகளின் பிரச்சாரம் அவசியம்: தி கார்டியன் முன்னாள் முதன்மை ஆசிரியர் வேண்டுகோள்

‘பருவநிலை மாற்றத்தை தடுக்க, கச்சா எண்ணெய், நிலக்கரி போன்ற இயற்கை வளங்களை எடுப்பதை தடுத்து நிறுத்தும் வகையில் பத்திரிகைகள் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்’ என்று ‘தி கார்டியன்’ பத்திரிகையின் முன்னாள் முதன்மை ஆசிரியர் ஆலன் ரஸ்பிரிட்ஜர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘தி இந்து’ அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான மையம் சார்பில், ‘பருவநிலை மாற்றம்: இதழியல் தவறிவிட்டதா?’ என்ற தலைப்பில் சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று சொற் பொழிவு நடந்தது. சிறப்பு விருந்தி னராக பிரிட்டன் ‘தி கார்டியன்’ பத்திரிகையின் முன்னாள் முதன்மை ஆசிரியர் ஆலன் ரஸ்பிரிட்ஜர் பங்கேற்று சொற்பொழிவாற்றினார்.

முன்னதாக, பருவநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலன் ரஸ்பிரிட்கர் எடுத்த முயற்சிகள் குறித்து இந்து என்.ராம் விளக்கினார்.

பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை விளக்கும் வகையில், ‘தி கார்டியன்’ பத்திரிகையில் ஆசிரியராக இருந்தபோது எடுத்த முயற்சிகள், விழிப்புணர்வு ஏற்படுத் தும் கட்டுரைகள் குறித்து ஆலன் ரஸ்பிரிட்ஜர் எடுத்துக் கூறினார். அப்போது அவர் பேசியதாவது:

பருவநிலை மாற்றத்தால் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்துள்ளதை 167 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. கச்சா எண்ணெய், நிலக்கரி உள்ளிட்ட இயற்கை எரிபொருட்களை 565 ஜிகா டன் வரை பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், 2,795 ஜிகா டன் அளவுக்கு இயற்கை எரிவாயு எடுக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் வெளியாகும் கார்பன்-டை-ஆக்ஸைடு, பாதுகாப்பான அளவை விட ஐந்து மடங்கு அதிகம். இதனால் ஏற்படும் பாதிப்புகளை மக்களுக்கு எடுத்துரைப்பதில் பத்திரிகைகள் அக்கறை காட்ட வில்லை. அதனால், நாங்கள் இயற்கை எரிபொருளை எடுப் பதையே தடுக்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டு அதை செய்து வருகிறோம். இயற்கை எரிபொருள் எடுக்கும் திட்டங்களுக்கு முதலீடு செய்வதை நிறுத்த பிரசாரம் செய்கிறோம். கச்சா எண்ணெய், நிலக்கரி போன்றவை பூமியிலேயே இருக்கட்டும் என்று வலிறுத்துகிறோம். இந்த பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து மக்கள் மத்தியில் பத்திரிகைகள் விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும்.

இவ்வாறு ஆலன் ரஸ்பிரிட்ஜர் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் விவசாய விஞ் ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா தேவன், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், நவநீதகிருஷ்ணன் எம்பி, மூத்த வழக்கறிஞர் ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஆலன் ரஸ்பிரிட்ஜர் பதிலளித்தார்.

வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், இந்தியா போன்ற நாடுகளில் எந்த அளவுக்கு உணவு உற்பத்தி பாதிக்கும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் விளக்கினார்.

நிகழ்ச்சியின் முடிவில் இந்து என்.ராம் பேசும்போது, ‘பருவநிலை மாற்றம் எவ்வளவு பெரிய பிரச்சினை என்பதை இந்த சொற்பொழிவு உணர்த்தியது. மேலும், பத்திரி கைகள் தங்கள் வழக்கமான பாணியில் பிரச்சினைகளை அணு காமல், மாறுபட்ட முறையில் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என் பதை ஆலன் எடுத்துரைத்தார்.

இப்பிரச்சினையில் இருந்து நாம் தப்பிக்க முடியாது. இதற்கு தீர்வு கண்டே ஆக வேண்டும். தீர்வுக்கு இன்னும் நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதையும் மிக அருமையாக சுட்டிக்காட்டி உள்ளார்’ என்று பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x