Published : 20 Oct 2019 09:56 AM
Last Updated : 20 Oct 2019 09:56 AM

விக்கிரவாண்டியில் விஜயகாந்த் பிரச்சாரம்: தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்

விக்கிரவாண்டி தொகுதி சூரப்பட்டு கிராமத்தில் வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்ட விஜயகாந்த்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று அதிமுக சார்பில் போட்டி யிடும் வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய வருகிறார் என்று தகவல் வெளியானது. இதனால் நேற்று காலை முதலே தேமுதிக தொண்டர்கள், கூட்டணிக் கட்சியினர் மற்றும் அவரது ரசிகர்கள் பெருமளவில் குவிந்து, எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர்.

பிரச்சார வேனில் முன்பக்கம் விஜயகாந்த் உட்கார்ந்து இருக்க, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வேட்பாளர் முத்தமிழ் செல்வன் ஆகியோர் நின்றபடி வாக்கு சேகரித்தனர். அப்போது, விஜயகாந்த் தாழ்ந்த குரலில் ”அதிமுகவுக்கு வாக்களியுங்கள், அமைதியாக இருங்கள்” என்று கூறி தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார். அங்கு காத்திருந்த தொண்டர்கள், பிரச்சார வேனை நெருங்கி விஜயகாந்த் அமர்ந்த இடத்துக்கு வந்து வேன் கண் ணாடியை கைகளால் தட்டி ஆரவா ரம் செய்தனர்.

உடல் நலக்குறைவால் கடந்த மக்களவைத் தேர்தலின்போது இப்பகுதியில் பிரச்சாரத்துக்கு வருகை தர இயலாத விஜய காந்த், இந்த இடைத்தேர்தலுக்கு வருகை தந்தது அவரது கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து கஞ்சனூர், சூரப் பட்டு ஆகிய இடங்களில் வேனில் நின்றபடி இதேபோல் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x