Published : 04 Jul 2015 12:35 PM
Last Updated : 04 Jul 2015 12:35 PM

நாட்டிலேயே தமிழக கிராமப்புறங்களில் மொபைல், இருசக்கர வாகனங்கள் வைத்திருப்போர் அதிகம்

நாட்டிலேயே தமிழக கிராமப்புற இல்லங்களில்தான் மொபைல் போன்களும், இருசக்கர வாகனங்களும் அதிகமாக இருப்பதாக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக பொருளாதார மற்றும் சாதி வாரியான கணக்கெடுப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியானது. தகவல்களின் அடிப்படையில் இந்தியாவில், 24.39 கோடி வீடுகள் உள்ளன. இவற்றில் 17.91 கோடி வீடுகள் கிராமங்களில் உள்ளன. இந்த வீடுகளில் 10.69 கோடி வீடுகள் பின்தங்கியவையாக கருதப்படுகின்றன.

ஊரகப் பகுதியில் உள்ள 5.37 கோடி வீடுகளில் வசிப்பவர்கள் (29.97%) நிலமற்றவர்கள். 2.37 கோடி குடும்பங்கள் ஓர் அறை உள்ள கச்சா வீடுகளில் வசிக்கின்றனர். எஸ்.சி. எஸ்.டி பிரிவைச் சேரந்த 3.86 கோடி குடும்பத்தினர் கிராமங்களில் வசிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் தமிழக கிராமப்புறங்களில் வசிப்பவர்களே நாட்டிலேயே அதிகளவில் மொபைல் போன், இருசக்கர வாகனம் அதிகமாக வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கிராமப்புறங்களில் உள்ள 29.91% இல்லங்களில் இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன. அதேபோல், தமிழக கிராமப்புறங்களில் மொபைல் போன் பயன்படுத்தவர்கள் 29.91%.

அதேவேளையில், தமிழகத்தில் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் கிராமவாசிகள் வெறும் 12.10% மட்டுமே. அதிலும், சொந்மாக விவசாய நிலம் வைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 5.01% என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x