Published : 18 Oct 2019 09:50 AM
Last Updated : 18 Oct 2019 09:50 AM
இ.ராமகிருஷ்ணன்
சென்னை
வடகிழக்குப் பருவ மழை பாதிப்பை ஏற்படுத்தினால் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக 7 ஆயிரத்து 345 தீயணைப்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். தாழ் வான பகுதிகளுக்கு கூடுதல் வீரர் கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள தோடு, விடுப்பில் இருப்பவர்களும் பணிக்குவர அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் வட கிழக்குப் பருவ மழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதை உறுதிபடுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 31 மாவட்டங் களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சி புரம் மாவட்டத்துக்கு மட்டும் கூடுத லாக 10 அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
தீயணைப்பு படை வீரர்களும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்து 345 வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். விடுப்பில் இருப்பவர்கள் பணிக்கு திரும்பவும் வாய்மொழி உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டும் விடுப்பு எடுக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் தூத்துக்குடி, சேலம், சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னி யாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பூர், வேலூர் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 331 தீயணைப்பு காவல் நிலையங்களில் உள்ள வீரர்களும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தீயணைப்பு துறை துணை இயக்குநர்கள் கூறிய தாவது: “தமிழகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய ஒக்கி, வார்தா மற்றும் கஜா புயல்களின் போது மீட்புப் பணிகளில் மிகச்சிறப் பாக செயல்பட்டோம். உயிர்களைக் காப்பாற்றுவது, தாழ்வான வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்களை மீட்பது, விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி இயல்புநிலை திரும்பச் செய்தது என மீட்புப் பணிகளில் துரிதமாகச் செயல்பட்டோம். தற்போது வட கிழக்கு பருவ மழையை எதிர் கொள்ளவும் தயாராகி விட்டோம். தாழ்வான பகுதிகள் கண்டறியப் பட்டு அங்கு கூடுதல் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். உயர் அதிகாரிகளும் சம்பவ இடங்களுக்கு விரைந்து செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் நீச்சலில் நன்கு தேர்ச்சி பெற்ற 123 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதும் நீச்சல் பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரர்கள் ஆங்காங்கே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
கண்ணாடி இழைகளிலான 8 விசைப் படகுகள், உயிர்காக் கும் மிதவைகள் மற்றும் மேலங்கி களுடன் கூடிய 86 மிதவைப் படகு கள், நீட்டிச் சுருக்கும் 13 ரப்பர் விசைப் படகுகள், இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்கள் உள்ள இடத்தை அடையாளம் காணும் 11 கருவிகள், அதிக அளவு நீர் வெளியேற்றும் திறனுள்ள எளிதில் தூக்கிச் செல்லக் கூடிய 111 பம்புகள் என மீட்புப் பணிக்கு தேவையான அத்தனை கருவிகளையும் பழுது நீக்கி, பரா மரிப்பு செய்து தயார் நிலையில் வைத்துள்ளோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT