Last Updated : 17 Oct, 2019 10:38 AM

 

Published : 17 Oct 2019 10:38 AM
Last Updated : 17 Oct 2019 10:38 AM

அசலை மிஞ்சும் நேர்த்தி: சிறுவர்களைக் கவரும் தீபாவளி துப்பாக்கிகள்- சிவகாசியில் ரூ.50 முதல் ரூ.300 வரை விற்பனை

சிவகாசி

அசலை மிஞ்சும் அளவில் சிறுவர்களைக் கவரும் வகையில் இந்த ஆண்டு தீபாவளி துப்பாக்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகை வந்தாலே சிறுவர்களுக்குக் கொண்டாட்டம்தான். புத்தாடைகள், பலகாரங்கள் மட்டுமின்றி பட்டாசு வெடிப்பது என்றால் சிறுவர்களுக்கு குதூகலம்தான்.

சிறுவர்களைக் கவரும் வகையில் ஆண்டுதோறும் சிவகாசியில் வகை, வகையான பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் சிறுவர்களைக் கவரும் வகையிலான பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக சிறுவர்களைக் கவரும் வகையில் அசல் துப்பாக்கிகளைப் போலவே தீபாவளி துப்பாக்கிகள் விற்பனைக்கு வந்துள்ளன.

இவை ரூ.50 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகின்றன. பட்டாசு வாங்க பெற்றோருடன் வரும் சிறுவர்களின் பட்டாசு தேர்வில் புதிய வடிவில் வந்துள்ள துப்பாக்கிகளுக்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு. சிறுவர்கள் மட்டுன்றி பெற்றோரும் ஆர்வமுடன் புதிதாக வந்துள்ள தீபாவளி துப்பாக்கிகளை வாங்கிச்செல்வது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, சிவகாசியில் பட்டாசு கடை நடத்திவரும் சரவணன் கூறுகையில், "பட்டாசு வெடிப்பதில் பெரியவர்களைவிட சிறுவர்களுக்கே ஆர்வம் அதிகம்.

அதனால், சிறுவர்களைக் கவரும் வகையில் ஆண்டுதோறும் புதுப்புது பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு அசல் துப்பாக்கிகளைப் போலவே தீபாவளி துப்பாக்கிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சாதாரண கேப்வெடி துப்பாக்கிகள் மட்டுமின்றி இந்த ஆண்டு புதுவரவாக ரிவால்வார், பிஸ்டல், சைலென்சர் பொறுத்தப்பட்ட துப்பாக்கி, இன்சாஸ், ஏ.கே-47, மெஷின்கன் போன்ற பல ரகங்களில் பிளாஸ்டிக், பைபர் மட்டுமின்றி இரும்பில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கள் அசலைப் போல தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.

இவற்றுடன், வீடியோ கேம்களில் உள்ள துப்பாக்கிகளைப் போலவும் பல துப்பாக்கிகள் விற்பனைக்கு வந்துள்ளன. குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோரும் இதை ஆர்வத்துடன் பார்த்து விரும்பி வாங்கிச்செல்கிறார்கள்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x