Published : 13 Jul 2015 08:36 AM
Last Updated : 13 Jul 2015 08:36 AM

2011-ல் அதிமுகவை வேவு பார்த்ததா திமுக?- ஒட்டுக்கேட்பு மென்பொருளை வாங்க பேரம் பேசிய தமிழக போலீஸ்- ஆதாரத்தை வெளியிட்டது விக்கிலீக்ஸ்

கடந்த 2011-ம் ஆண்டில் இத்தாலிய நிறுவனம் ஒன்றுடன், தமிழக போலீஸ் அதிகாரிகள் ஒட்டுக்கேட்பு மென்பொருளை வாங்க பேரம் பேசியது தொடர்பாக ‘விக்கிலீக்ஸ்’ வெளியிட்டுள்ள ஆதாரம், அரசி யல் வட்டாரத்தையும், காவல் துறையையும், அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

உலகளவில் பல்வேறு ரகசியங் களையும், வெளியில் தெரியாத பல்வேறு நிகழ்வுகளையும் அவ்வப் போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது ‘விக்கிலீக்ஸ்’.

இந்த வகையில் கடந்த 11-ம் தேதி இந்தியாவில் உள்ள பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளான ரா, ஐபி மற்றும் மாநில போலீஸ் உளவுப் பிரிவுகள் உள்ளிட்டவை நாடு முழுவதும் மொபைல் போன், இ-மெயில் உள்ளிட்டவற்றின் மூலம் பரிமாறப்படும் தகவல்களை பெறுவதற்கான மென்பொருளை வாங்க இத்தாலிய நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி யதை அம்பலப்படுத்தி யுள்ளது.

இதில் கடந்த 2011-ம் ஆண்டு தமிழக போலீஸ் நுண்ணறிவுப் பிரிவும் அந்த நிறுவனத்துடன் பேசியிருப்பது குறித்த தகவலும் இடம் பெற்றுள்ளது. இதற்காக இத்தாலிய நிறுவனத்தைச் சேர்ந்த, ‘ஹேக்கர்ஸ்’ குழுவைச் சேர்ந்தவர்கள், கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி, தமிழக போலீஸ் அதிகாரிகளை சந்தித்து, மென்பொருள் குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

முன்னதாக, பிப்ரவரி மாதமே இரு தரப்புக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. மேலும் இந்த மென்பொருளை வாங்குவது குறித்த தகவல் தொடர்புகளில் அதிகாரிகள் சிலரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதும், விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ‘400 ஜிபி’ அளவிலான இ-மெயில் விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

எனவே, 2011-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர் தலின்போது, அதிமுகவின் நடவடிக் கைகளை கண்காணிக்க திமுக அரசு இந்த ஏற்பாடுகளை செய்ததா என்ற கேள்வி எழுப்பப் படுகிறது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா முதல் வர் கே.சந்திரசேகரராவ் ஆகியோர் தொலைபேசி பேச்சுகள் ஒட்டுக் கேட்பு தொடர்பாக, சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதைத் தொடர்ந்து ‘விக்கி லீக்ஸ்’ இந்த விவகாரத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது.

இதில், 2011-ல் தமிழக நுண் ணறிவு போலீஸார் தவிர, அடுத் தடுத்த ஆண்டுகளில் ஆந்திரம், மகாராஷ்டிரம், கர்நாடகம், மேற்கு வங்கம், குஜராத், டெல்லி போலீஸா ரும் இந்த மென்பொருளை வாங்க பேரம் பேசியிருப்பது தெரியவந் துள்ளது.

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இந்த ஆதாரம், தமிழக அரசியல் மற்றும் காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x