Published : 22 Jul 2015 07:38 AM
Last Updated : 22 Jul 2015 07:38 AM

சென்னை ஆட்சியர் அறிவிப்பு: தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினராக சேர 25-ம் தேதி முகாம் - கொருக்குப்பேட்டையில் நடக்கிறது

அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினராக சேர்வதற்கான சிறப்பு முகாம் சென்னையில் வரும் 25-ம் தேதி நடக்கவுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தர வல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

அமைப்புசாரா தொழிலா ளர்கள், கட்டுமானத் தொழிலாளர் களின் நலன்களை பாதுகாக்க 17 நல வாரியங்களை உருவாக்கி, வாரிய உறுப்பினர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.

கட்டுமானத் தொழிலாளர், உடலுழைப்புத் தொழிலாளர், ஆட்டோ ரிக்‌ஷா - வாடகை ஊர்தி ஓட்டுநர், சலவைத் தொழிலாளர், முடிதிருத்துவோர், தையல் தொழிலாளர், கைவினைத் தொழிலாளர், பனைமரத் தொழிலாளர், கைத்தறி - கைத்தறிப் பட்டு நெய்யும் தொழிலாளர், காலணி - தோல் பொருள் உற்பத்தி - தோல் பதனிடும் தொழிலாளர், ஓவியர், பொற்கொல்லர், மண்பாண்டத் தொழிலாளர், வீட்டுப் பணியாளர், விசைத்தறி நெசவாளர், பாதையோர வணிகர்கள் - கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர் என 17 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்களை சேர்க்க தொழிலாளர் துறை சிறப்பு முகாம் நடத்துகிறது.

சென்னை மாவட்டத்துக்கான சிறப்பு முகாம், கொருக்குப் பேட்டை ஜெ.ஜெ. நகர் பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி 41-வது வார்டு அலுவலகத்தில் வரும் 25-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

இதுவரை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளாத அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் இந்த முகாமில் உறுப்பினராக பதிவு செய்துகொண்டு, அரசு வழங்கும் நலத்திட்டங்களைப் பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x