Published : 12 Oct 2019 04:35 PM
Last Updated : 12 Oct 2019 04:35 PM
விருதுநகர்
விருதுநகரில் பிளாஸ்டிக் அரவை ஆலையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சாம்பலாயின.
விருதுநகர்-சிவகாசி சாலையில் ஆத்துப்பாலம் அருகே மகளிர் சுய உதவிக்குழு நடத்தி வந்த பிளாஸ்டிக் அரவை ஆலை இயங்கி வந்தது. இங்கு, பழைய பிளஸ்டிக் பொருள்கள் சேகரிக்கப்பட்டு நவீன இயந்திரங்கள் மூலம் அவை அரவை செய்யப்பட்டு, மறு சுழற்சிக்காகவும், பிளாஸ்டிக் சாலை அமைப்பதற்காகவும் ஒரு டன் பிளாஸ்டிக் ரூ.35 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு இந்த பிளாஸ்டிக் அரவை ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த விருதுநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் ஆலையில் இருந்து 75 டன் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் ரூ.4 லட்சம் மதிப்பிலான அரவை இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
விபத்து குறித்து விருதுநகர் மேற்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT