Published : 18 Jul 2015 07:49 AM
Last Updated : 18 Jul 2015 07:49 AM

குரூப்-2 தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 (நேர்முகத்தேர்வு பதவிகள்) முதல்நிலைத் தேர்வு ஜூலை 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு (ஹால்டிக்கெட்) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சந்தேகம் ஏதேனும் இருந்தால் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1800 425 1002 மூலமாகவோ கேட்டு தெளிவு பெறலாம். என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.ஷோபனா தெரிவித்துள்ளார்.

சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1,241 காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இந்த குரூப்-2 தேர்வுக்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x