Published : 02 Jul 2015 02:07 PM
Last Updated : 02 Jul 2015 02:07 PM

டாப்சிலிப் முகாம் யானைகளுக்கு கணினி சிப் பொருத்தம்

பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதி, உலாந்தி வனச்சரகம் கோழிகமுத்தி என்ற இடத்தில் உள்ள வனத்துறை யானைகள் முகாமில் 22 காட்டுயானைகள் உள்ளன. இவை டாப்சிலிப்பில் யானைகள் சவாரி உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தலா 11 ஆண், பெண் யானைகள் கொண்ட இந்த முகாமில் அதிக வயது முதிர்ந்த விஜயலட்சுமி (62) என்ற யானையும், ஒரு வயது மட்டுமே நிரம்பிய பெயரிடப்படாத குட்டி யானையும் இடம்பெற்றுள்ளன.

இந்த யானைகளை அடையாளப்படுத்தும் விதமாக அவற்றின் உடலில் கணினி சிப் பொருத்தும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் கோழிகமுத்தி முகாமில் இருக்கும் 7 யானைகளுக்கு நேற்று கணினி சிப் பொருத்தப்பட்டன.

வனத்துறையினர் கூறும் போது, 'தமிழகம் முழுவதும் யானைகளுக்கு கணினி சிப் பொருத்தி அடையாளப்படுத்தப்படுகின்றன. கோழிகமுத்தி முகாமில் ஏற்கெனவே 15 யானைகளுக்கு கணினி சிப் பொருத்தப்பட்டுள்ளன. மீதமிருந்த யானைகளுக்கும் பொருத்தப்பட்டுவிட்டது. சிறிய அளவிலான சிப், ஊசி மூலம் யானையின் உடலில் செலுத்தப்படும். அந்த சிப்பில், யானையின் பெயர், வயது, எடை, உயரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படும். டிஜிட்டல் ரீடர் கருவி மூலம் ஒவ்வொரு யானைகளின் தகவல்களையும் தனித்தனியே அறிய முடியும்' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x