Published : 08 Oct 2019 12:23 PM
Last Updated : 08 Oct 2019 12:23 PM

இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க திமுக திட்டம்: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் வெற்றிபெற்றது போன்று, விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் பணபலத்தால் வெற்றி பெற திமுக முயல்வதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் உள்ள தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் இல்லத்துக்கு நேற்று (அக்.7) சென்று அவரைச் சந்தித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். மரியாதை நிமித்தமாக தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்துப் பேசியதாக முதல்வர் பழனிசாமி கூறினார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார்.

மேலும், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வாக்குகளுக்குப் பணம் கொடுக்கும் என குற்றம் சாட்டிய முதல்வர் பழனிசாமி, எனினும் மக்கள் செல்வாக்குடன் அதிமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி கூறுகையில், "நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெறுவதற்கான முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது. ஏனென்றால், ஏற்கெனவே திமுக வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் வருமான வரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் தொகுதியில் இவ்வாறு வெற்றி பெற்றது போல் இந்த இடைத்தேர்தலிலும் வெற்றி பெறலாம் என திமுக நினைக்கிறது," எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x