Published : 21 Jul 2015 11:40 AM
Last Updated : 21 Jul 2015 11:40 AM

தங்கம் விலை தொடர் சரிவு: இன்று ஒரு சவரன் ரூ.19,080

சர்வதேச சந்தையில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைந்தது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்று தங்கம் விலை சரிவைச் சந்தித்துள்ளது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2385-கும், ஒரு சவரன் ரூ.19,080-க்கும் விற்கப்படுகிறது. 24 கேரட் சுத்த தங்கம் 10 கிராம் ரூ.25510-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.36.30-க்கும், மொத்த விற்பனையில் 1 கிலோ கட்டி வெள்ளி ரூ.33960-க்கும் விற்பனையாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x