Published : 18 Jul 2015 08:22 AM
Last Updated : 18 Jul 2015 08:22 AM

தமிழகத்தில் ரூ.3000 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்

தமிழகத்தில் சுமார் ரூ.3000 கோடியில் 515 கி.மீ. தூரத்துக்கு சாலை மேம்படுத்தும் பணியை மத்திய சாலை போக்குவரத்து, கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான கிழக்கு கடற்கரை சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் விரைவில் நான்குவழிச் சாலையாக அமைக்கப்படும் என அவர் அறிவித்தார்.

தமிழகத்தில் 10 சாலை மேம் பாட்டுத் திட்டங்கள் ரூ.2838.62 கோடியில் மத்திய அரசு சார்பில் நிறைவேற்றப் படுகின்றன. அதேபோல் புதிய பாலங்களும் கட்டப் படுகின்றன. இப்பணிகளுக் கான அடிக்கல் நாட்டு விழா மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் நேற்று நடைபெற்றது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சாலை மேம்பாட்டு பணி களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இத்திட் டத்தின் கீழ் தேசிய நெடுஞ் சாலை எண் 49-ல் ரூ.1387.11 கோடியில் மதுரை- பரமக்குடி (76 கி.மீ.) வரை நான்குவழிச் சாலையும், பரமக்குடி- ராமநாதபுரம் (39 கி.மீ.) வரை இருவழிச் சாலையும் அமைக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை எண் 67-ல் நாகப்பட்டினம்- தஞ்சாவூர் வரை 78 கி.மீ. தூரத் துக்கு ரூ.578.39 கோடியில் இருவழிச்சாலை அமைக்கப் படுகிறது. மேலும் ராமநாத புரம்- தனுஷ்கோடி, திருவண் ணாமலை- விழுப்புரம், கடலூர்- விருத்தாச்சலம், திருப்புவனம்- தொண்டி, தஞ்சாவூர்- பெரம்பலூர் சாலைகளும் மேம்படுத் தப்படுகின்றன.

சுசீந்திரத்தில் தேசிய நெடுஞ்சாலை 47-ல் பழை யாற்றின் குறுக்கே சுசீந்தி ரத்தையும், கன்னியாகுமரி யையும் இணைக்கும் வகை யில் 80 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் பழுத டைந்து காணப்படுகிறது. அந்தப்பாலம் இடிக்கப்பட்டு ரூ.7.54 கோடியில் புதிய பாலம் கட்டப்படுகிறது.

இரு இடங்களில் நடை பெற்ற அடிக்கல் நாட்டு விழாக்களில் அமைச்சர் நிதின் கட்கரி பேசியது: கன்னியாகுமரி முதல் சென்னை வரை 571 கி.மீ. தொலைவிலான (கன்னியாகுமரி- நாகப்பட் டினம் 427 கி.மீ., புதுச்சேரி- சென்னை 144 கி.மீ.) கிழக்கு கடற்கரைச் சாலையானது ரூ.10 ஆயிரம் கோடியில் நான்குவழிச் சாலையாக மாற்றப்படும். நாட்டிலுள்ள 96 ஆயிரம் கி.மீ. தூர தேசிய நெடுஞ்சாலையை, 1 லட்சத்து 30 ஆயிரம் கிலோ மீட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியாவில் 101 நீர்வழி தடங்களும், தமிழகத்தில் 8 நீர்வழி தடங்களும் ஏற்படுத் தப்படும். ஆந்திராவையும், தமிழகத்தையும் இணைக்கும் பக்கிங்ஹாம் நீர்வழிச்சாலைப் பணிகள் டிசம்பர் மாதம் தொடங் கப்படும்.

குளச்சல் துறைமுகம்

குளச்சல் துறைமுக திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முனைப்புடன் உள்ளது. இதுகுறித்து பிரதமரிடம் பேசியுள்ளேன். தமிழக அரசு குளச்சல் துறைமுகத்தை, மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். குளச்சல் துறைமுகத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும். மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு நல்லமுறையில் ஒத்து ழைத்து வழங்கி வருகிறது.

இந்தியாவில் இருந்து வங்க தேசம், பூடான், நேபாளம் உள்ளிட்ட பக்கத்து நாடுக ளுக்கு சாலைகள் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகி றோம். இதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வரு கின்றன.

தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்பி மட்டுமே உள்ளார். இருப்பினும் மத்திய அரசு பாரபட்சம் பார்க்காமல் தமிழ கத்துக்கு நிதியை அள்ளித் தருகிறது. தமிழகத்துக்கு சம உரிமை, சம நிதி பங்கீடு வழங்கப்படுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x