Published : 05 Jul 2015 01:25 PM
Last Updated : 05 Jul 2015 01:25 PM

ஓபிஎஸ் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்

தேனி மாவட்டம், டி.கல்லுப்பட்டி யைச் சேர்ந்த கோயில் பூசாரி நாகமுத்து (23). இவர் கடந்த 2012-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தொடர் பாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதர ரும், பெரியகுளம் நகராட்சித் தலைவருமான ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சித் தலைவர் பாண்டி உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில், ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாக ஓ.ராஜா, பாண்டி, மணிமாறன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டிருந்ததால் ஓ.ராஜா, பாண்டி ஆகிய இருவரும் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றனர்.

இதற்கிடையே ஓ. ராஜாவின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி, பூசாரி நாகமுத்துவின் பெற்றோர் தரப்பில், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

பெரியகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.ராஜா, பாண்டி, மணிமாறன், சிவக்குமார், லோகு, ஞானம், சரவணன் ஆகிய 7 பேரும் நேரில் ஆஜராயினர். அப்போது, அடுத்த விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெறும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x