Published : 07 Oct 2019 08:24 AM
Last Updated : 07 Oct 2019 08:24 AM
சென்னை
கூவம் ஆற்றில் மூழ்கி சிறுவர்கள் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஆயிரம்விளக்கு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரித்தீஷ் குமார் (13). இவர் தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் (8), ஸ்டீபன் (12) மற்றும் 5 பேருடன் சேர்ந்து அதே பகுதி திடீர் நகர், கூவம் ஆற்றங் கரை ஓரம் நேற்று மதியம் விளையாடி யுள்ளனர். பின்னர், பிரதீப் மரப்பலகை ஒன்றை ஆற்றில் செலுத்தி அதன்மீது அமர்ந்தபடி விளையாடியுள்ளார்.
அப்போது, பாரம் தாங்காமல் மரப் பலகை கவிழ்ந்து ஆற்றில் மூழ்கியுள்ளார். இதை கரையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரித்தீஷ்குமார் மற்றும் ஸ்டீபன் ஆகிய 2 பேரும் பிரதீப்பை காப்பாற்ற ஆற்றில் இறங்கியுள்ளனர்.
அப்போது, ஆற்றில் உள்ள சேற்றில் இருவரும் சிக்கிக் கொண்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு மற்ற நண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர். இதற்கிடையில் அக்கம் பக்கத்தினர் திரண்டுள்ளனர். தகவலறிந்து எழும்பூரில் இருந்து தீயணைப்பு படை வீரர்கதீயணைப்பு படை வீரர்கதீயணைப்பு படை வீரர்களும் விரைந்து ரப்பர் படகு மூலம் மீட்பு பணியில் இறங்கினர்.
இதற்கிடயில் நீரில் மூழ்கி ரித்திஷ்குமார், பிரதீப் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். ஸ்டீபனும் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவர்கள் உயிரிழப்பு குறித்து ஆயிரம் விளக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment