Published : 06 Oct 2019 12:14 PM
Last Updated : 06 Oct 2019 12:14 PM

மேற்கு மண்டல காவல்துறையில் சாலை விபத்துகளை தடுக்க காவல் நிலையங்கள் வாரியாக ‘பிளாக் ஸ்பாட்’: விபத்து சதவீதம் குறைந்ததாக தகவல்

டி.ஜி.ரகுபதி

கோவை 

கோவை மேற்கு மண்டல காவல் துறையில் சாலை விபத்துகளை தடுக்க, காவல் நிலையங்கள் வாரியாக ‘பிளாக் ஸ்பாட்’ திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

மேற்கு மண்டல காவல்துறை யில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 200-க் கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளன. இயற்கையாகவும், நோயி னாலும் உயிரிழப்பு ஏற்படுவதை போல், சாலை விபத்துகளாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க மேற்கு மண்டல காவல்துறையில் ‘பிளாக் ஸ்பாட்’ திட்டம், பலதுறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஆய்வு, விழிப் புணர்வு மேற்கொள்தல் போன் றவை மேற்கொள்ளப்படுகின்றன.

மேற்கு மண்டல காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘வாகனங்களில் அதிவேகமாக செல்லுதல், மது போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட சாலை விதிமீறல்களால், அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்தாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை கோவையில் 1,533, ஈரோட்டில் 1,765, திருப்பூரில் 1,881, நீலகிரியில் 206, சேலத்தில் 1,718, நாமக்கல்லில் 1,569, தருமபுரியில் 1,171, கிருஷ்ண கிரியில் 1,482 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. நடப்பாண்டு, ஜனவரி முதல் தற்போது வரை கோவையில் 1,367, ஈரோட்டில் 1,675, திருப்பூரில் 1,485, நீலகிரியில் 114, சேலத்தில் 1,487, நாமக்கல்லில் 1,404, தருமபுரியில் 1,171, கிருஷ்ண கிரியில் 1,327 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

கடந்தாண்டு, ஜனவரி முதல் அக்டோபர் வரை கோவையில் 409, ஈரோட்டில் 280, திருப்பூரில் 369, நீலகிரியில் 38, சேலத்தில் 332, நாமக்கல்லில் 312, தருமபுரியில் 146, கிருஷ்ணகிரியில் 316 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டு ஜனவரி முதல் தற்போது வரை கோவையில் 358, ஈரோட்டில் 146, திருப்பூரில் 290, நீலகிரியில் 9, சேலத்தில் 237, நாமக்கல்லில் 272, தருமபுரியில் 135, கிருஷ்ணகிரியில் 285 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள் ளனர்,’’ என்றார்.

‘‘பிரதான சாலைகளில் விதிகளை மீறிச் செல்லும் வாகன ஓட்டுநர்கள், விபத்து ஏற்படுத்தும் வகையில், கருப்பு ஸ்டிக்கர் ஒட்டா மல், அதிக ஒளியுடன் கூடிய முகப்பு விளக்குகளை பயன்படுத் தும் வாகன ஓட்டுநர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் கே.பெரியய்யா கூறும் போது, ‘‘மேற்கு மண்டலத்தில் கடந்தாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 11,323 சாலை விபத்துகள் ஏற்பட்டு 2,202 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டு இதே காலகட்டத்தில் 9,815 சாலை விபத்துகள் ஏற்பட்டு 1,732 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்தாண்டை ஒப்பிடும் போது மைனஸ் 13.32 சதவீதம் சாலை விபத்துகளும், மைனஸ் 21.34 சதவீதம் உயிரிழப்பு களும் நடப்பாண்டு குறைந்துள்ளன. அபராதம் விதித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மேற்கு மண்டலத்தில், ஒவ் வொரு காவல் நிலையம் வாரியாக ‘பிளாக் ஸ்பாட்’ திட்டம் அமல் படுத்தப்படுகிறது. 2 உயிரிழப்பு விபத்துகளுக்கு மேல் ஏற்படும் இடம் ‘ரெட் ஸ்பாட்டாகவும்’, 2 உயிரிழப்பு அல்லாத விபத்துகளுக்கு மேல் ஏற்படும் இடம் ‘கிரீன் ஸ்பாட்’ ஆகவும் பிரிக்கப்பட்டு, இந்த இடங்கள் ‘பிளாக் ஸ்பாட்’ ஆக ஒருங்கிணைக்கப்படுகின்றன. தற்போது, ஒவ்வொரு மாவட்டத் திலும் 25 முதல் 30 பிளாக் ஸ்பாட் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

பிளாக் ஸ்பாட் இடங்களில் எஸ்.பி, கூடுதல் எஸ்.பி, டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் ஆகியோரும், விபத்து ஏற்பட்ட சாலைக்கு உட்பட்ட உள்ளாட்சி அல்லது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இணைந்து ஆய்வு மேற்கொள்வர்.

அங்கு தொடர் விபத்தை தடுக்க, உடனடியாக என்ன செய்யலாம் என முடிவு எடுப்பர். அதை தொடர்ந்து, அந்த இடங்களில் தடுப்பு பேரிகார்டர்கள் வைத்தல், வேகத்தடை அமைத்தல், காவலர் நியமித்தல், ஒளிரும் விளக்கு, எச்சரிக்கை பலகை அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடவடிக்கையால் கடந்தாண்டை ஒப்பிடும் போது, நடப்பாண்டு விபத்துகள் குறைந்துள்ளன,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x