Published : 06 Oct 2019 09:58 AM
Last Updated : 06 Oct 2019 09:58 AM

54-வது ஆண்டு வள்ளலார் காந்தி விழா நிறைவு: தமிழ் உணர்வை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் - பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் வலியுறுத்தல்

சென்னையில் நடந்த 54-வது ஆண்டு வள்ளலார் காந்தி விழா நிறைவு பெற்றது. தமிழ் உணர்வை, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பேரூர் ஆதீனம் கயிலைப் புனிதர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இராமலிங்கர் பணிமன்றம், ஏவி.எம். அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் 54-வது ஆண்டு அருட் பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி விழா கடந்த 1-ம் தேதி தொடங்கியது. தினமும் கருத்தரங் குகள், நூல் வெளியீட்டு விழாக்கள் நடைபெற்று வந்தன.

5 நாட்கள் நடைபெற்ற விழா வின் நிறைவு நாளான நேற்று காலை சரவணப்பெருமாள் ஐயரின் திருக்குறள் கருத்துரை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சியில், பேரூர் ஆதீனம் கயிலைப் புனிதர் சாந்த லிங்க மருதாசல அடிகளார் நூலை வெளியிட்டார். தவத்திரு ஊரன் அடிகள், தவத்திரு கோவை சிவப் பிரகாச சுவாமிகள் நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டனர்.

பின்னர், விழாவில் பேரூர் ஆதீனம் கயிலைப் புனிதர் சாந்த லிங்க மருதாசல அடிகளார் பேசியதாவது:

திருக்குறள் 50, 60 ஆண்டு களுக்கு முன்புதான் பாடத்திட்டத் தில் சேர்க்கப்பட்டது. ஆனால், தான் வாழ்ந்த காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வள்ளலார் திருக் குறளைக் கொண்டு சேர்த்தார்.

மற்ற இலக்கியங்களிலும், பண் பாடுகளிலும் இல்லாத சிறப்பு, நம் முன்னோர் உலகம் தழுவிய சிந்தனையை கொண்டவர்களாக இருந்தனர். உலக சமுதாயத்தை ஒருங்கிணைத்து வழிகாட்டும் நூலாக திருக்குறள் விளங்குகிறது. அயல்நாடுகளில் இருப்பவர்களிடம் இருக்கும் தமிழ் உணர்வு, நம்மிடத் தில் சற்று குறைந்து வருகிறது.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று கூறி வருகிறோம். ஆனால், எதிலும் தமிழ் இல்லை என்ற நிலைதான் உள்ளது. எனவே, தமிழ் உணர்வை, அடுத்த தலை முறைக்கு கொண்டு செல்ல வேண் டும். அனைவரும் எங்களுடைய சமயம், கொள்கை, கோட்பாடுகள் தான் உயர்ந்தது என்று கூறி கொண் டிருக்கும் சூழலில் உலக மக்களை ஒருங்கிணைக்கும் வகையில் திருக்குறளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இராமலிங்கர் பணிமன்றத் தலை வர் டாக்டர் ம.மாணிக்கம் பேசும் போது, "இந்தியாவில் சாதி என்பது முதலில் இல்லை. ஆங்கிலேயர் கள்தான் சாதியை கொண்டு வந்தனர். தமிழகத்தில்தான் நம் முடைய பெயருடன் சாதியை சேர்ப்பதில்லை. மற்ற மாநிலங் களில் இன்றும் பெயருடன் சாதியை இணைத்து வைத்துள்ளனர். இதன்மூலம், இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

முன்னேறிய கலாசாரத்தில்தான் திருக்குறள் போன்ற நூல் வர முடியும். நம் காலாசாரத்தை மறந்துவிட்டு இன்று வெளிநாட்ட வரை நோக்கி ஓடி கொண்டிருக் கிறோம். நம்முடைய கலச்சாரமும் பராம்பரியமும் சிறப்பானவை என்பதை நாம் உணர வேண்டும்" என்றார்.

விழாவில், தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர்கள் முனைவர் ஒளவை நடராசன், முனைவர் இ.சுந்தரமூர்த்தி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழி பெயர்ப்பு மையத்தின் இயக்குநர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x