Published : 02 Jul 2015 08:39 AM
Last Updated : 02 Jul 2015 08:39 AM

கொல்லப்புடி சுப்பாராவ் எழுதிய ஆங்கில நாவல் வெளியீட்டு விழா: நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பு

பிரபல தெலுங்கு எழுத்தாளர் கொல்லப்புடி சுப்பாராவ் எழுதிய ’நோ மர்டர் டூ நைட்’என்ற ஆங்கில நாவல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்ட நடிகர் கமல் ஹாசன் நூலினை வெளியிட்டு பேசியதாவது:

சென்னையில் நடக்கும் ஒரு குற்றத்தைப் பற்றிய மர்ம நாவலாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சென் னையைப் பற்றி உலகத் தரத்தில் எழுத வேண்டும் என்று பலரும் விரும்பினர். எழுத்தாளர் வடுவூர் கே.துரைசாமி எழுதிய மர்ம நாவல்களை விரும்பிப் படித் திருக்கிறேன். அவரது எழுத்துக் களின் ரசிகன் நான். எழுத்தாளர் சுஜாதாவுக்கு முன்னோடியாய் இருந்தவர் வடுவூர் கே.துரைசாமி.

சென்னையைப் பற்றி ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்கிற மூத்த எழுத்தாளர்களின் கனவை கொல்லப்புடி சுப்பாராவ் இந்த நாவலின் மூலம் நிறை வேற்றியுள்ளார். சுப்பாராவின் தாத்தா ஸ்ரீபடா பின்னகபாணி, அப்பா கொல்லப்புடி மாருதிராவ் இருவரும் தெலுங்கில் குறிப்பிடத் தக்க எழுத்தாளர்கள். அவர்களின் வழியில் சுப்பாராவும் சிறப்பான முறையில் இன்றைய இளைய தலைமுறையினர் விரும்பிப் படிக்கும் வகையில் இந்த மர்ம நாவலை எழுதியுள்ளார்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். சினிமா ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், கவிதாலயா கிருஷ்ணன் உட்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x