Published : 10 Jul 2015 07:51 AM
Last Updated : 10 Jul 2015 07:51 AM

ஐயப்பன் மீதான விசாரணையில் குறுக்கிட மயிலாப்பூர் காவல் அதிகாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.ஏ.எம்.ராமசாமி மனு

தொழிலதிபர் ஐயப்பன் என்கிற முத்தையா மீது கொடுக்கப்பட்ட புகார் மீது விசாரணை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வும், விசாரணையில் குறுக்கிடவும் மயிலாப்பூர் துணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் எம்.ஏ.எம்.ராமசாமி மனுதாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த மே 23-ம் தேதி முத்தையா அறிவுறுத்தலின் பேரில் சுப்பிரமணி யம், அனவர்தன் உள்பட 40 பேர் எனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து எனது பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கினர். ஓர் அறையை மூடுவதற்கு முயற்சித்தனர். அதை எனது வீட்டு ஊழியர் ஒருவர் தடுத்தபோது, ‘முத்தையா சொல்லித்தான் இதைச் செய்கிறோம்’ என்று அவர் கூறினார்.

வீட்டை விட்டு வெளியேறும்படியும் அந்த கும்பல் எங்களை மிரட்டியது. உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அந்த கும்பல் செயல்பட்டது. உடனே நான் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு, ரோந்து வாகனத்தை அனுப்பும் படி கோரினேன்; பின்னர் புகாரும் அளித்தேன். ஆனால், எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை.

அன்றிரவு மீண்டும் 40 பேர் கொண்ட கும்பல் முத்தையா தலை மையில் வந்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து எங்கள் வீட்டிலிருந்த கணேசன், குருசாமியைத் தாக்கினர். உருட்டுக் கட்டையால் தாக்கியதில் குருசாமிக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. லட்சுமணன் என்ற ஊழியர் தட்டிக் கேட்டபோது, ‘எனக்கும் அப்பாவுக் கும் மோதல் ஏற்பட நீதான் காரணம்’ என்று சொல்லி அவரை முத்தையாக தாக்கினார். இதையெல்லாம் காவல் உயர் அதிகாரியிடம் சொல்லி முறை யிட்டும் பலனில்லை. முத்தையா தரப்பு கொடுத்த புகாரின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், நான் கொடுத்த 2 புகார்களில் ஒன்றில் மட்டுமே வழக்குப் பதிவு செய்துள் ளனர். இவ்வழக்கில் விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தர விட வேண்டும். விசாரணையில் குறுக் கிடக்கூடாது என்று மயிலாப்பூர் துணை ஆணையர், உதவி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x