Published : 03 Oct 2019 02:13 PM
Last Updated : 03 Oct 2019 02:13 PM
நெல்லை
நாங்குநேரியில் இடைத்தேர்தல் வருவதற்கே காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த எச்.வசந்தகுமாரின் பதவி ஆசைதான் காரணம் என்று அதிமுக விமர்சித்துவரும் நிலையில் அதற்கு விளக்கமளிக்கும் வகையில் கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார்.
அண்மையில் தூத்துக்குடியில் பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, நாங்குநேரி இடைத்தேர்தல் வருவதற்கே காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்த எச்.வசந்தகுமாரின் பதவி ஆசைதான் காரணம் எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், நெல்லையில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, "அதிமுக, பாஜக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.
குமரி மாவட்டத்தில் மதவாதம் தலைதூக்கி வந்த நேரத்தில் அதை எதிர்கொள்ளவே நாங்குநேரி எம்.எல்.ஏ.,வாக இருந்த வசந்தகுமாரை குமரி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் மேலிடம் போட்டியிட வைத்தது. நாங்குநேரி இடைத்தேர்தலில் மக்களையும் கூட்டணி கட்சியினரையும் மட்டுமே நம்பி களம் இறங்கியுள்ளோம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை. பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ வீட்டிற்கு சென்றபோது எனது இதயமே நொறுங்கியது. ஆனால், இந்த நேரத்தில் பிரதமர் வருகிறார் எங்களுக்கு பேனர் வைக்க அனுமதி வேண்டும் என அரசே கேட்பது கேவலமாக இருக்கிறது.
நீட் தேர்வில் சம்மந்தமில்லாத கேள்வி கேட்டு மாணவர்களை துன்புறுத்துவது சரி இல்லை, எனவே தான் நீட் தேர்வு தேவையில்லை என ராகுல்காந்தி வலியுறுத்தி வருகிறார்" என்று பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் தனது கருத்துகளை பதிவு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT