Published : 04 Jul 2015 02:35 PM
Last Updated : 04 Jul 2015 02:35 PM

மழையால் ஏற்படும் நிலச்சரிவை முன்பே கண்டுபிடிக்க காந்திகிராம பல்கலைக்கழகம் நீலகிரி மலையில் ஆராய்ச்சி

மழையால் ஏற்படும் நிலச்சரிவு களை முன்னரே கண்டறிந்து தெரிவிக்க நவீன கருவிகளுடன், திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி தொடங்கி உள்ளது.

காந்திகிராம பல்கலைக்கழக புவியியல் தகவல் தொழில்நுட்பத் துறை, புதுடெல்லியில் உள்ள தேசிய அறிவியல் தொழில் நுட்பத்துறை மூலம் பல்வேறு புவியியல் ஆராய்ச்சிகளை மேற் கொண்டு வருகிறது.

ரூ.29 லட்சம் நிதி ஒதுக்கீடு

தற்போது மழையால் ஏற்படும் நிலச்சரிவுகளை முன்னரே கண்டறிந்து தெரிவிப்பதற்கான ஆராய்ச்சியில், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் புவியியல் தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர்கள் ஈடுபட்டுள்ள னர். இதற்காக, புதுடெல்லி தேசிய அறிவியல் தொழில்நுட்பத் துறை ரூ. 29 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது.

இதுகுறித்து புவியியல் தகவல் தொழில்நுட்ப மையத் தலைவர் என்.டி. மணி கூறியதாவது: ‘‘மழையால் ஏற்படும் நிலச் சரிவுகளை முன்னறிவித்தல் என்னும் தலைப்பிலான இந்த ஆராய்ச்சியானது, நவீனக் கருவி களின் உதவியுடன் நீலகிரி மலைப் பகுதிகளில் மேற்கொள்ளப் படுகிறது. உதவிப் பேராசிரியர் மெ. முத்துக்குமார் இந்த ஆய்வை மேற்கொள்கிறார்.

காந்திகிராமப் பல்கலைக் கழகப் புவி தகவலியல் மையம் இயற்கை வளங்களின் மேலாண்மை மற்றும் இயற்கை பேரழிவு மேலாண்மை குறித்த ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

புவியியல் படித்தால் வேலை

கடந்த ஆண்டுகளில் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் புவியியல் தகவல் தொழில்நுட்ப படிப்பை முடித்தவர்களில் 90 சதவீதத்துக்குமேல் வேலை வாய்ப்பினை பெற்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் இந்தியாவில் இத்துறையில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புள்ளது.

ஆகையால், இந்தப் படிப்பை முடிப்பவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும். இந்தப் பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டப்படிப்பு அல்லது கணிதம், புள்ளியியல், வணிகக் கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில், ஏதாவது ஒன்றில் இளங்கலை பட்டப்படிப்போ அல்லது +2 அல்லது பட்டப் படிப்பில் கணிதம், கணினி அறிவியலை ஓர் பாடமாகவோ படித்திருக்க வேண்டும்.

இந்தக் கல்வியாண்டுக்கான (2015 - 2016) மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. கூடுதல் விவரங்களுக்கு இயக்குநர், புவியியல் தகவல் தொழில்நுட்பம், காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் - 624 302, திண்டுக்கல் மாவட்டம், (கைபேசி- 94430 15375) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்’’ என் றார்.

காந்திகிராமப் பல்கலைக் கழகப் புவி தகவலியல் மையம் இயற்கை வளங்களின் மேலாண்மை மற்றும் இயற்கை பேரழிவு மேலாண்மை குறித்த ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x