Published : 05 Jul 2015 03:03 PM
Last Updated : 05 Jul 2015 03:03 PM

ஹெல்மெட் சோதனையின்போது வாகன ஓட்டிகளை கம்பால் தட்டும் போலீஸார்: குமரி பயணிகள் வேதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹெல்மெட் சோதனையின்போது பயணிகளிடம் மிரட்டல் தொணியில் நடக்கக்கூடாது என்ற எஸ்பியின் உத்தரவு மீறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை லத்தியால் தட்டும் சம்பவமும் நடந்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட கருங்கல்லை சேர்ந்த வாசகர் ஒருவர் 'தி இந்து' நாளிதழின் 'உங்கள் குரல்' சேவையில் தந்து ஆதங்கத்தை பதிவு செய்ததுடன், இந்த அநாகரீகமான போக்கால் போலீஸாருக்கு அவப்பெயர் ஏற்படுவதையும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1-ம் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் நடைமுறையில் வந்ததை சமூக நல ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹெல்மெட் வாகன சோதனை தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை ஹெல்மெட் அணியாமல் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் 2 ஆயிரம் பேருக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கட்டாய ஹெல்மெட் நடைமுறைக்கு வந்ததுமே, வாகன ஓட்டிகளிடம் மிரட் டல் தொணியிலோ, மனம் வேதனை அடையும் வகை யிலோ நடந்துகொள்ளக் கூடாது என போலீஸாருக்கு, எஸ்பி மணி வண்ணன் அறிவுறுத்தி யிருந்தார்.

இதுபோல் கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம், களியக்காவிளை என பயணிகள் அதிகம் செல்லும் பகுதிகளில் போலீஸார் கட்டாய ஹெல்மெட் சோதனையை விதிமுறைப்படி எடுத்து வருகின்றனர். ஆனால், கருங்கல் பஸ் நிலையம், கல்லூரி சந்திப்பு பகுதியில் ஹெல்மெட் அணியாத நபர்களை, சாலையில் நின்றவாறே போலீஸார் சிலர் லத்தியால் தட்டுகின்றனர்.

இதுகுறித்து கருங்கல் பகுதியில் ஹெல்மெட் இன்றி பைக்கில் பயணித்தபோது போலீஸாரால் தாக்கப்பட்ட கல்லூரி மாணவர் ஒருவர் கூறும்போது, 'கருங்கல் பஸ் நிலையம் சந்திப்பில் இரு நாட்களுக்கு முன்பு சென்றபோது பைக்கை ஓரங்கட்ட சொன்னதுடன் ஒருமையில் பேசியவாறு லத்தியால் கையிலும், முதுகிலும் அடித்தனர். அதுபற்றி கேட்டபோது போலீஸ் சீருடையுடன் வந்த இரு இளைஞர்கள் மேலும் தாக்கினர்.

இதுபோல் குளச்சல், ஆரல்வாய்மொழி வழித்தடங்க ளிலும் நடந்து வருகிறது. இது போலீஸார் மீது வெறுப்பை ஏற்படுத்தும் அணுகுமுறை. ஹெல் மெட் அணியாமல் சென்றால் விதிமுறைப்படி உள்ள அபராதம், மற்றும் பிற நடைமுறைகளை கையாளலாம். அதைவிட்டு அநாகரீகமாக நடப்பது ஒட்டுமொத்த போலீஸாருக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது' என்றார்.

இதுதொடர்பாக கருங்கல் போலீஸ் வட்டாரத்தில் கேட்டபோது, 'ஹெல்மெட் வாகன சோதனையில் ஒவ்வொரு ஸ்டேஷன் பகுதிகளில் உள்ள இளைஞர் படையினர் போலீஸாருடன் சேர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் சிலர், சினிமா போலீஸ் பாணியில்... எல்லை மீறி வாகன ஓட்டிகளிடம் நடப்பதாக தெரிகிறது. இதுகுறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x