Last Updated : 30 Sep, 2019 05:12 PM

 

Published : 30 Sep 2019 05:12 PM
Last Updated : 30 Sep 2019 05:12 PM

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி.மனோகரன் மனு தாக்கல்

திருநெல்வேலி

நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 2-ம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இத்தேர்தலுக்கு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று(செப்.30) முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கட்சியின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவரான ரூபி ஆர். மனோகரன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அவருடன் திமுக தேர்தல் பணிக்குழு தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி, கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. முகமது அபூபக்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரூபி மனோகரன், "நாங்குநேரி தொகுதியில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்கவும் பாடுபடுவேன்" என்று தெரிவித்தார்.

அதிமுக வேட்பாளரும் மனு..
அதிமுக சார்பில் போட்டியிடும் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மனுக்கள் மீதான பரிசீலனை இன்று முதல் நடைபெறுகிறது. வரும் 3-ம் தேதி பிற்பகல் 3 மணிவரை மனுக்களை திரும்பப்பெறலாம். அன்று மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x