

எஸ்.விஜயகுமார்
சேலம்
தீபாவளியை முன்னிட்டு ஆவின் நிறு வனம் கேரட் மைசூர்பாவை அறிமுகம் செய்ய உள்ளது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) மாவட்டந்தோறும் பால் பண்ணை களை அமைத்து, பால் உற்பத்தி யாளர்களிடம் இருந்து பால் கொள் முதல் செய்கிறது. இதில், சேலம் ஆவின் பால் பண்ணையானது, நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, அதில் 1.57 லட்சம் லிட்டர் பாலினை உள்ளூர் விற்பனைக்காகவும், 1.70 லட்சம் லிட்டர் பாலினை சென்னைக்கும் அனுப்பி வருகிறது. மீதமுள்ள பாலில் இருந்து தயிர், வெண்ணெய், பால் பவுடர், நெய் உள்ளிட்ட உப பொருட்களை தயாரித்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், ஆவின் சார்பில் முதல்முறையாக தீபாவளியை முன்னிட்டு சேலம் ஆவின் பால் பண்ணையில் கேரட் மைசூர்பா தயாரிக்க நடவடிக்கை எடுத்துள் ளது. அக்டோபர் 10-ம் தேதிக்குப் பின்னர் கேரட் மைசூர்பா விற் பனைக்கு வரவுள்ளது.
இதுதவிர பால் கோவா, ஆவின் நெய் லட்டு, ஸ்பெஷல் முந்திரி கேக், ஸ்பெஷல் நெய் அல்வா, மைசூர் பா, ஸ்பெஷல் மைசூர் பா, ஸ்பெஷல் மிக்சர், சோன்பப்படி ஆகியவை 250 கிராம், அரை கிலோ, ஒரு கிலோ என்ற அளவுகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து சேலம் ஆவின் நிறுவன பொது மேலாளர் விஜய் பாபு கூறியதாவது: ஆவின் நிறுவ னம் சுத்தமான பசும்பாலில் தயாரிக் கப்பட்ட நெய்யைக் கொண்டு, தர மான முறையில் இனிப்பு வகை களை உற்பத்தி செய்து, விற்ப னைக்கு அனுப்புகிறது. தீபா வளியை முன்னிட்டு, ஆவினில் முதன் முறையாக, சுவை மிகுந்த கேரட் மைசூர் பா தயாரிக்கவுள்ளது.
ஆவினில் உற்பத்தி செய்யும் இனிப்பு மற்றும் கார வகைகள், வாடிக்கையாளர்களுக்காக கிஃப்ட் பாக்ஸ்களில் அடைத்து வழங்கப் படவுள்ளன. சேலம் மாவட்டத் தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 40 டன் அளவுக்கு ஆவின் இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆவின் இனிப்பு மற்றும் கார வகைகளை மாவட்டத்தில் உள்ள 550 விற்பனை மையங்கள் மூலமாக வும், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் ஊழியர்களுக்கு, விற்பனைப் பிரதி நிதிகள் மூலமாக நேரடியாக விற் பனை செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. சேலம் ஆவின் நிறுவ னம் பதப்படுத்தப்பட்ட பாலினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறிப்பிடத்தக்கது.