Published : 31 May 2014 10:00 AM
Last Updated : 31 May 2014 10:00 AM

வளர்ச்சிக்கு வழிவகுத்த வசந்த கிராமம் திட்டம்- ரோட்டரியை கொண்டாடும் கோட்டுதேவாதூர் மக்கள்

‘தானே’ புயலால் தலை கீழாய் புரட்டிப் போடப்பட்ட தங்கர்பச்சானின் பத்திரக் கோட்டை கிராம மக்களுக்கு முழுமையான மருத்துவ உதவி களை வழங்கி சேவை செய்த சென்னை கிழக்கு ஆர்.ஏ.புரம் ரோட்டரி கிளப், இப்போது ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து அதன் அடிப்படைத் தேவைகளை கட்டமைத்துக் கொண்டிருக் கிறது.

அதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசினார் கிளப்பின் மக்கள் தொடர்பு நிர்வாகி ரகுநாதன். கிராமங்களில் சேவை அமைப்பு கள் கால் பதிப்பது அரிது. அதனால்தான் நாங்கள் கிராமத்துப் பக்கம் திரும்பி னோம். ஏதாவதொரு கிராமத்தை தத்தெடுத்து அந்த கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதி களை பூர்த்தி செய்வது என கிளப்பில் முடிவெடுத்தோம். அந்த திட்டத்துக்கு ‘வசந்த கிராமம்’ என்று பெயர் வைத்தோம்.

அறிமுகமான ஊராக இருந்தால் பணிசெய்ய சிரமம் இருக்காது என்பதால் எனது சொந்த கிராமமான மதுராந் தகம் அருகிலுள்ள கோட்டு தேவாதூரைத் தத்தெடுத்தோம். எங்களின் திட்டத்தைக் கேட்டதுமே ‘குடிக்கிற தண்ணிக்கு ரொம்ப கஷ்டப்படுறோம். மொதல்ல அதுக்கு ஒரு வழியைப் பண்ணிக் குடுங்க’ன்னு மக்கள் கேட்டாங்க.

அந்த ஊரில் 2 பொதுக் கிணறுகள் இருக்கின்றன. அதிலிருந்துதான் குடிதண்ணீர் எடுக்க வேண்டும். ஆனால், கிணறுகளை சரியாக பராமரிக் காமல் விட்டதால் பாழ்பட்டு போய்விட்டது. முதல் காரியமாக அந்தக் கிணறுகளை தூர்வாரி ஆழப்படுத்தி மூடி போட்டோம்.

அடுத்ததாக, அங்குள்ள நடுநிலைப் பள்ளியில் தண்ணீர் பற்றாக்குறையால் கழிவறையை மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. தண்ணீர் தொட்டியை உயர்த்திக் கட்டி, கூடுதல் தண்ணீரை ஏற்றவைத்து கழிவறைகளை சுத்தம் செய்து கொடுத்தோம். 2 ஆசிரியர்கள் மட்டுமே இருந்த அந்தப் பள்ளியில் எங்களது செலவில் மாதம் மூவாயிரம் ரூபாய் சம்பளத்தில் உள்ளூரைச் சேர்ந்த ஒருவரை கூடுதல் ஆசிரியராக நியமித்தோம். இதுவரைக்கும் அவருக்கு நாங்கள் சம்பளம் கொடுத்து வருகிறோம்.

நாங்கள் ஒவ்வொரு பணியாக எடுத்துச் செய்ததைப் பார்த்ததும் கிராம மக்கள் பெரிய லிஸ்டை கொண்டு வந்து நீட்டினார்கள். குடிதண்ணீர் போக மற்ற தேவைகளுக்காக போர்வெல் அமைக்க வேண்டும் என்றார்கள். அதற்கு செலவு அதிகமாகும் என்பதால் அப்போது காஞ்சிபுரம் எம்.பி.யாக இருந்த விஸ்வநாதனை ஊருக்கு அழைத்து வந்து விஷயத்தைச் சொன்னோம். அவரும் போர்வெல் அமைத்து குழாய்கள் பதிப்பதற்காக எட்டு லட்சம் ரூபாயை ஒதுக்கினார். அந்தப் பணிகளும் இப்போது முடிந்துவிட்டன.

அடுத்தபடியாக அந்த கிராமத்தில் தொடர்ந்து மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம். இதுவரை 64 பேருக்கு எங்கள் செலவில் கண் புரை அறுவைச் சிகிச்சை செய்திருப்பதுடன் 84 பேருக்கு மூக்குக் கண்ணாடியும் வாங்கித் தந்திருக்கிறோம். ஊரக வளர்ச்சி முகமையின்கீழ் நவீன கழிப்பறைகள் கட்டுவதற்கு பயனாளிகள் பங்களிப்பாக தலா ரூ.3,500 செலுத்த வேண்டும். அந்தத் தொகையை நாங்களே செலுத்தி 18 வீடுகளுக்கு நவீன கழிப்பறைகளை கட்டிக் கொடுக்க வைத்திருக்கிறோம்.

நாங்கள் கால்பதிப்பதற்கு முன்பு, கிராமத்தில் நான்கைந்து பேர்தான் முதியோர் உதவித் தொகை பெற்று வந்தனர். எங்களது முயற்சியால் இப்போது 104 பேர் முதியோர் உதவித் தொகை பெறுகின்றனர். இப்போது, தெருக்களுக்கு சோலார் எல்.ஈ.டி. விளக்கு களை அமைத்துத் தரும்படி கிராமத்திலிருந்து கேட்டிருக் கிறார்கள். முதல்கட்டமாக ஐந்து விளக்குகளை அமைத்துக் கொடுக்க தீர்மானித்திருக்கி றோம். கோட்டு தேவாதூர் கிராமத்தின் மீது ஐந்தாண்டு களுக்கு எங்கள் பார்வை இருக்கும். அதற்குள்ளாக அந்த கிராமத்தின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்துவிடு வோம்.. நம்பிக்கையுடன் சொன்னார் ரகுநாதன்.

கூடிப் பேசினோம்.. சிற்றுண்டி சாப்பிட்டோம்.. சங்கத்தை கலைத் தோம் என்றில்லாமல் வித்தியாச மாய் சிந்தித்திருக்கிறார்கள் சென்னை கிழக்கு ஆர்.ஏ.புரம் ரோட்டரி கிளப் நண்பர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x