Published : 25 Jul 2015 08:42 AM
Last Updated : 25 Jul 2015 08:42 AM

வாக்குச்சாவடி முகவர் கண்காணிப்புக் குழு அமைப்பு: 2016 பேரவைத் தேர்தல் பணிகளை தொடங்கியது திமுக - ரூ.17.23 கோடி தேர்தல் நிதி வசூல்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்களின் தேர்தல் பணிகளை முறைப்படுத்த 17 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது. இதன் மூலம் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பணி களை அக்கட்சி தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்களின் தேர்தல் பணிகளை முறைப்படுத்த, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், சட்டத்துறை இணைச் செயலாளர்கள் இ.பரந்தாமன், வீ.கண்ணதாசன், எம்.ஷாஜகான், ஜி.தேவராஜ், சட்டத்துறை துணைச் செயலாளர்கள் கே.எஸ்.ரவிச் சந்திரன், பா.நம்பிச்செல்வன், வி.வைத்தியலிங்கம், தேர்தல் பணிக்குழு துணைத் தலைவர் சிவப்பிரகாசம், தலைமைக் கழக வழக்கறிஞர்கள் ப.முத்துகுமார், ப.கணேசன், இரா.நீலகண்டன், வி.அருண், ஜெ.பச்சையப்பன், சூர்யா வெற்றிகொண்டான், ஆ.தாமோதரன், கே.ஜெ.சரவணன் ஆகியோரைக் கொண்ட கண் காணிப்புக் குழு அமைக்கப்பட் டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தாராளமாக நிதி அளிக்குமாறு திமுகவினருக்கு கடந்த மார்ச் 11-ம் தேதி கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார். மறுநாளே ரூ.1,00,001 நிதி அளித்து வசூலை கருணாநிதி தொடங்கி வைத்தார். முதல் நாளில் ரூ.5 லட்சத்து 96 ஆயிரம் வசூலானது. கடந்த 22-ம் தேதி வரை ரூ.14 கோடியே 3 லட்சத்து 23 ஆயிரத்து 100 வசூலாகியுள்ளது. ஜூலை 23-ம் தேதி சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் ரூ. 3 கோடியே 20 லட்சத்தை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழ கன் வழங்கினார். அதையும் சேர்த்து இதுவரை ரூ. 17 கோடியே 23 லட்சத்து 23 ஆயிரத்து 100 வசூலாகியுள்ளது. கடந்த 2014 மக்களவைத் தேர்தல் ரூ. 108 கோடி வசூலாகியது. இந்த முறை ரூ. 200 கோடி இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x