Published : 09 Jul 2015 11:58 AM
Last Updated : 09 Jul 2015 11:58 AM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரிப்பு

சென்னையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு (8 கிராம்) ரூ.152 குறைந்தது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ. 19,664-க்கு விற்பனையானது.

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2467-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ஒரு சவரன் ரூ.19,736-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் சுத்த தங்கம் 10 கிராம் ரூ.26380-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.37-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.34600-க்கு விற்கப்படுகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x