Published : 21 Jul 2015 07:44 AM
Last Updated : 21 Jul 2015 07:44 AM
சென்னை மெட்ரோ ரயில் நிலையங் களுக்குள் மழை நீர் அதிகம் வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பக்கவாட்டில் தடுப்பு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 29-ம் தேதி தொடங் கிவைத்தார். அதைத் தொடர்ந்து ஆலந்தூரில் இருந்து ஈக்காட்டுத் தாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம், சிஎம்பிடி வழியாக கோயம்பேடுக்கு உயர்மட்ட பாதை வழியாக தினமும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பிரம்மாண்ட ரயில் நிலையங்கள், நுழைவுவாயில் முன்பகுதியில் பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம், உள்ளே செல்ல சென்சார் பொருத்தப்பட்ட வழிகள், பொருட்களை பரிசோ தனை செய்ய ஸ்கேனர் வசதி, உயர்மட்டத்தில் அமைக்கப் பட்டுள்ள ரயில்வே நடைமேடை களுக்கு செல்லவும், கீழே இறங்கி வரவும் 40 மீட்டர் தூரத்துக்கு தலா 4 எஸ்கலேட்டர் வசதிகள், ஏ.சி. வசதியுடன் கூடிய ரயில் பெட்டிகள் ஆகியவற்றை பார்த்து வியந்த மக்கள், வெளிநாட்டுக்கு சென்றுவந்த உணர்வு ஏற்பட்டதாக கூறி குதூகலித்தனர். மெட்ரோ ரயிலில் உலா வந்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் மழைநீர் வருவதாக புகார் எழுந்துள்ளது. சென்னையில் கடந்த 2 நாட்களாக இரவில் திடீரென மழை பெய்தது. அப்போது, மெட்ரோ ரயில் நிலையத்தின் நடைமேடை பகுதிகளில் மழைநீர் உள்ளே வந்தது. நிற்கக்கூட இடமில்லாமல் பயணிகள் அவதிப்பட்டனர். மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை களுக்கும், நடைமேடை சுவர் களுக்கும் இடையே அதிக இடைவெளி இருப்பதாலேயே, மழைநீர் உள்ளே வருகிறது என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் சிலரிடம் கேட்டபோது, ‘‘நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் மழை பெய்யும்போது கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தேன். அப்போது, நடைமேடை பகுதிகளில் மழைநீர் உள்ளே வந்துவிட்டது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அதிக மழைநீர் உள்ளே வந்தது. முதியோர், குழந்தைகள் உட்பட பல தரப்பினரும் அவதிப்பட்டனர். பக்கவாட்டில் தடுப்பு அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முன்வர வேண்டும்’’ என்றனர்.
இதுபற்றி அங்குள்ள மெட்ரோ ரயில் பணியாளர்களிடம் கேட்டபோது, ‘‘எல்லா மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அதிக அளவில் மழைநீர் உள்ளே வருவதில்லை. சாரல்தான் உள்ளே அடிக்கிறது. ஆலந்தூர், வடபழனி, சிஎம்பிடி, கோயம்பேடு நிலையங்களின் அருகில் பெரிய அளவில் கட்டிடங்கள் இல்லாததால், சாதாரணமாக காற்று வீசினாலே மழைநீர் எளிதில் உள்ளே வந்துவிடுகிறது’’ என்றனர்.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘ரயில் நிலையங் களில் நல்ல காற்றாட்டம் இருக்க வேண்டும் என்பதற்காகவே மேற்கூரைக்கும் நடைமேடை சுவர்களுக்கும் இடையே தாராளமாக இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் புகார் குறித்து பரிசீலிக்கப்படும். தேவையி ருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT