Published : 19 Sep 2019 06:18 PM
Last Updated : 19 Sep 2019 06:18 PM
சென்னை
புதிய மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள அபராதத் தொகை மற்றும் கட்டண உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் நேற்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். சுமார் 40 லட்சம் லாரிகள் ஓடாத தால், ரூ.100 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.
புதிய மோட்டார் வாகனச் சட் டத்தை மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமல்படுத் தியது. இதில் வாகனங்கள் மற்றும் சாலை விதிமீறல்களுக்கான அப ராதக் கட்டணம், வாகனப் பதிவு, உரிமம் புதுப்பிப்பு உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அபராதத் தொகை மற்றும் உயர்த்தப்பட்ட கட்டணத்தைக் குறைக்கக் கோரி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங் கிரஸ் சார்பில் நாடு முழுவதும் நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான லாரி உரிமையாளர் சங்கங்கள் பங்கேற்றன. நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் லாரிகள் ஓடவில்லை. தமிழகத்தில் மட்டும் 4 லட்சம் லாரிகள் ஓடவில்லை.
இதனால், தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் ஜவுளி, மஞ்சள், இரும்பு கம்பிகள், ஜவ்வரிசி, காய் கறிகள் உள்ளிட்ட பொருட்கள் தேக்கம் அடைந்தன. இதேபோல வட மாநிலங்களில் இருந்து தமிழகத் துக்கு வரும் பருப்பு, பூண்டு, வெங்காயம், தானிய வகைகள், மார்பிள் மற்றும் கிரானைட் கற்கள் உள்ளிட்டவைகளின் வரத்தும் பாதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அகில இந் திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.யுவராஜ் கூறியதாவது:
டீசல் விலை உயர்வைக் கட்டுப் படுத்த வேண்டும், சுங்கச்சாவடி களை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும், டீசலுக்கான செஸ் வரியை நீக்க வேண்டும், காப் பீடுத் தொகை உயர்வைக் குறைக்க வேண்டும், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கடந்த 5 ஆண்டு களாகப் போராடி வருகிறோம்.
ஏற்கெனவே தொழில்துறை மந்தம் மற்றும் வேலையாட்கள் பற்றாக்குறையால் லாரி தொழில் நலிவடைந்துள்ளது. இந்நிலையில் புதிய மோட்டார் வாகனச் சட் டத்தை கொண்டுவந்து, அபராதத் தொகை, வாகனப் பதிவு, புதுப் பிப்பு உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் பல மடங்கு உயர்த் தப்பட்டுள்ளன. இதனால் லாரி தொழில் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மோட்டார் வாகனச் சட்ட பாதிப்பு, சுங்கக் கட்டணம் உயர்வு, டீசல் விலை உயர்வு உட்பட பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒருநாள் அடை யாள வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளோம். இதனால், தமிழகம் உட்பட நாடுமுழுவதும் சுமார் 40 லட்சம் லாரிகள் ஓடவில்லை. ரூ.100 கோடிக்கும் அதிகமான சரக்குகள் ஆங்காங்கே தேக்க மடைந்துள்ளன.
தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேங்கியுள்ளன. மத்திய, மாநில அரசுகள் எங்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்ட போராட்டம் குறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் டெல்லியில் கூடி அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் மாவட்ட லாரி உரிமை யாளர்கள் சங்கத் தலைவர் சென்ன கேசவன் கூறியதாவது:
புதிய மோட்டார் வாகன திருத்த சட்ட மசோதாவில் லாரி தொழிலை பாதிக்கக் கூடிய அம்சங்கள் நிறைய உள்ளன. இதனால், நாடு முழுவதும் 15 லட்சம் லாரிகளுக் கும், தமிழகத்தில் 2 லட்சம் லாரி களுக்கும் லோடு கிடைக்காமல் தொழில் நசிவை சந்தித்துள்ளன.
10 கோடி பேர் வேலையிழப்பு
லாரி தொழில் மட்டுமல்லாமல் பேருந்து, டாக்ஸி, ஆட்டோ, வாடகை வேன் உள்ளிட்ட மோட் டார் வாகன தொழில்களும் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இதனால், இந்தியா முழுவதும் 10 கோடி பேர் வேலையிழந்துள்ளனர்.
வேலை நிறுத்தத்தால் தமி ழகத்தில் இருந்து ஜவுளி, இரும்பு கம்பி, உப்பு, கிழங்கு மாவு, காய்கறி, கோழி, முட்டை உள்ளிட்டவை வெளி மாநிலங்களுக்கு செல்வதும், வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயம், பூண்டு, பருப்பு, கோதுமை, இயந்திரங்கள் உள் ளிட்ட பொருட்கள் வருவதும் முடங்கியது. அத்தியாவசியப் பொருட்களான மருந்து, பால், ரேஷன் பொருட்கள், பெட்ரோல், சமையல் எரிவாயு லாரிகள் மட்டும் நேற்று இயங்கின. மாநிலம் முழுவதும் 85 சதவீத லாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றன.
நேற்று நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட் கள் தேக்கமடைந்தன. தமிழகத் தில் ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்தன. இதனால், லாரி உரிமையாளர் களுக்கு ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வெறிச்சோடிய மாட்டு சந்தை
ஈரோடு மாவட்டம், கருங்கல் பாளையத்தில் வியாழக்கிழமை களில் மாட்டுச் சந்தை கூடும், நேற்று லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக மாட்டுச் சந்தைக்கு 400 மாடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. வழக்கமாக கோவை, நாமக்கல், தருமபுரி, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து வியாபாரிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடு களை சந்தைக்கு லாரிகள் மூலம் கொண்டு வருவார்கள். அதேபோல, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநி லங்களில் இருந்து வியாபாரிகள் ஈரோடு மாட்டுச் சந்தைக்கு வந்து மாடுகளை வாங்கி லாரிகளில் ஏற் றிச் செல்வார்கள். லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக வெளி மாநில வியாபாரிகளும் வராததால், மாட்டுச் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment