Published : 10 Jul 2015 08:18 AM
Last Updated : 10 Jul 2015 08:18 AM

நவீன தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்ட திமுக இணையதளம்: கருணாநிதி தொடங்கி வைத்தார்

அனைத்து விவரங்களுடன் நவீன தொழில்நுட்பத்தில் புதுப் பிக்கப்பட்டுள்ள www.dmk.in என்ற கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை திமுக தலைவர் கருணாநிதி நேற்று தொடங்கி வைத்தார்.

தகவல் தொழில்நுட்பப் புரட்சி யில் தன்னை இணைத்துக் கொண்ட திமுக, 1998-ல் தனி இணையதளத்தை தொடங்கியது. 1999-ல் முரசொலி நாளிதழுக்கென தனி இணையதளம் www.murasoli.in தொடங்கப்பட்டது. 1964 முதல் வெளிவந்த முரசொலி இதழ் கள் அனைத்தும் இந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. ஒரு நாளிதழ் தனது 50 ஆண்டுகால இதழ்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது முரசொலி மட்டுமே.

சமூக ஊடகங்கள்

சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதும் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முகநூல், டுவிட்டரில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தனது ஒவ்வொரு அசைவையும் முகநூலில் வெளி யிட்டு வரும் கருணாநிதி, பழைய வரலாறுகளையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இதற்கு திமுக தொண்டர்களிடம் மட்டு மின்றி, மாற்றுக் கட்சியினர், பொது மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. www.kalaignar karunanidhi.com என்ற தனி இணையதளத்தையும் கருணாநிதி செயல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், www.dmk.in என்ற இணையதளம் நவீன தொழில்நுட்பத்துடன் திமுக பற்றிய அனைத்து விவரங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப் பிக்கப் பட்ட இணையதளத்தை தனது கோபாலபுரம் இல்லத்தி லிருந்து கருணாநிதி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி யில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

1916-ல் தொடங்கப்பட்ட தென்னிந்திய நலச்சங்கம் நீதிக் கட்சியாக மாறியது, 1938-ல் நீதிக் கட்சியில் பெரியார் இணைந்தது, 1944-ல் திராவிடர் கழகம் என பெயர் மாற்றப்பட்டது, 1949-ல் திமுக தொடங்கப்பட்டது, 1967-ல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைத்தது, 1969-ல் கருணாநிதி முதல்வரானது, 1982-ல் திமுக இளைஞரணி தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டது, 13 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு 1989-ல் கருணாநிதி மீண்டும் முதல்வரானது, 2004 மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வெற்றியுடன் மத்திய அரசில் இடம் பெற்றது என திமுகவின் முக்கிய வரலாறுகள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன.

திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரை முருகன், துணைப் பொதுச்செய லாளர்கள் வி.பி.துரைசாமி, சற்குண பாண்டியன், ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரைப் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

திமுக மாவட்ட, மாநகரச் செய லாளர்கள், அணிகள், குழுக்களின் மாநில நிர்வாகிகளின் பெயர், முகவரி, செல்பேசி எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன. திமுகவில் உறுப்பினராக இணையவும், கருத்துகள், புகார்கள், கேள்வி களை தெரிவிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

கட்சி தொடர்பாக நடந்த நிகழ்வுகளின் புகைப்படங்கள், வீடியோக்கள், ஊடகங்களில் வந்த பதிவுகள், நடக்கவிருக்கும் நிகழ்வுகள் குறித்த விவரங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x