Published : 12 Jul 2015 11:30 AM
Last Updated : 12 Jul 2015 11:30 AM

தமிழக அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்க டாசலத்துக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் வீடு திரும்பி அவர், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினரான தோப்பு என்.டி.வெங்கடாசலம், தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச் சராக பதவி வகித்து வருகிறார். இவர் நேற்று ஈரோடு திண்டலில் நடைபெற்ற உலக மக்கள் தொகை விழாவில் பங்கேற்றார். பின்னர் ஆப்பகூடலில் நடந்த அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கும் விழாவில் பங்கேற்கச் சென்றார். அப்போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற் பட்டது. இதையடுத்து, கவுந்த பாடியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத் துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அமைச்சருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப் பது தெரிந்தது. தொடர்ந்து அவ ருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

ஈரோடு ஆட்சியர் பிரபாகர் மற்றும் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் சிபி.சக்கரவர்த்தி ஆகியோர் அமைச்சரை சந்தித்து நலம் விசாரித்தனர். மாலையில் அமைச்சர் தோப்பு என்.டி.வெங் கடாசலம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இருப்பினும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x