Last Updated : 12 Jul, 2015 01:41 PM

 

Published : 12 Jul 2015 01:41 PM
Last Updated : 12 Jul 2015 01:41 PM

பேருந்து நிலையங்களில் வியாபாரத்தில் ஈடுபடுத்தப்படும் அரசு பள்ளி மாணவர்கள்: பெற்றோர் அதிர்ச்சி

பேருந்து நிலையங்களில் சிற்றுண்டி விற்பனையாளர்களாக பள்ளி மாணவர்களை பயன்படுத்தும் அவலம் நடைபெற்று வருகிறது. விருத்தாசலம் மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பாலான பேருந்து நிலையங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தைகளைத் தெய்வமாகப் பார்க்கும் நம் தமிழகத்தில்தான் சுமார் 74 ஆயிரம் குழந்தைத் தொழி லாளர்கள் உள்ளனர். வறுமையான குடும்பச் சூழல், குழந்தைகளுக்கு சரியான பாதுகாப்பின்மை, கல்வி கற்க முடியாத சூழல் என பல்வேறு காரணங்களால் குழந்தைத் தொழி லாளர்கள் உருவாகின்றனர். இருப் பினும் தற்போது பள்ளிக்குச் செல் லும் சிறுவர்களும் குழந்தைத் தொழி லாளர்களாக திணிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையை நிரூபிக்கின்ற வகையில் தமிழகத்தின் சில நகரங் களில் வறுமையான குடும்பச் சூழ லில் பள்ளிச் செல்லும் சிறுவர்களி டம் சில ரூபாய் தாள்களை காண்பித்து அவர்களை சிற்றுண்டி விற்பனையாளர்களாக மாற்றும் அவலம் நடைபெறுகிறது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் நேற்று பள்ளிச் சீருடையில் ஒரு சிறுவன் வெள்ளரிப் பிஞ்சுகளை பாலிதீன் பைகளில் போட்டு ஒவ்வொரு பேருந்தாக ஏறி இறங்கி விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது பேருந்து நிலைய பெண் காவலர் ஒருவர் சந்தேக மடைந்து அந்த சிறுவனை அழைத்து விசாரித்தபோது, விருத்தாசலத் துக்கு அருகில் உள்ள கிராமத்தில் ஒரு நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருவதும், கடந்த சில தினங்களாக பள்ளிக்குச் செல்லாமல் பேருந்து நிலையத்தில் வெள்ளரிப் பிஞ்சுகளை விற்பனை செய்யும் பெண் வியாபாரியிட மிருந்து வெள்ளரிப் பிஞ்சுகளை பெற்று, அவற்றை விற்பனை செய்வதும், அதற்கு அந்த பெண் வியாபாரி கமிஷன் அடிப்படையில் சம்பளம் வழங்கி வருவதும் தெரியவந்தது. இந்த சிறுவனைப் போன்று மேலும் சில சிறுவர்கள் பள்ளிகளுக்கு போகாமல் வியா பாரத்தில் ஈடுபட்டுவருவது தெரிய வந்தது.

பின்னர் நடத்திய தொடர் விசார ணையில், விருத்தாசலத்தை அடுத்த ஆலடி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சிப்ஸ் பாக்கெட் தயார் செய்து பல பள்ளி மாணவர்களை சிற்றுண்டி விற்பனையாளர்களாக ஈடுபடுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல, வடலூர், பெண்ணாடம், திட்டக்குடி, வேப்பூர், பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை, தொழுதூர் போன்ற பேருந்து நிலையங்களிலும் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களை சிற்றுண்டி விற்பனையாளர்களாகப் பயன்படுத்தி வருவதாகக் கூறப் படுகிறது.

இதையடுத்து, சிறுவனின் பெற் றோர்களுக்கு போலீஸார் தகவல் அளித்து அவர்களை வரவழைத்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத் தனர். சிறுவனை விற்பனையில் ஈடுபடுத்திய பெண் வியாபாரியை யும் எச்சரித்து அனுப்பினர். சிறுவன் பிடிபட்டதை அறிந்ததும் சிப்ஸ் விற்பனையாளர்கள் விருத்தா சலம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறி விட்டனர். இதுபற்றி அங்கிருந்த பெட்டிக் கடைக்கார ரிடம் விசாரித்தபோது, இதுபோன்று கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறுவதாகத் தெரிவித்தார். மேலும், பேருந்து நிலைய வளா கத்தில் உள்ள டாஸ்மாக் கடையை ஒட்டிய பாரில் மாலை நேரங்களில் பள்ளிச் சிறுவர்கள் விற்பனை யாளராக இருப்பதை காணலாம் என்ற அதிர்ச்சி தகவலையும் கூறினார்.

குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுக்கவும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் 1960-ம் ஆண்டு இந்திய அரசு குழந்தைகள் சட்டத்தை இயற்றியது. குழந்தைகள் இளம் வயதில் குற்றங்கள் செய் வதைத் தடுத்து அந்தக் குழந்தை களின் பாதுகாப்புக்காக 1986-ல் மத்திய அரசு குழந்தைகள் நீதிச் சட்டத்தை இயற்றியது. குழந் தைத் தொழிலாளர்கள் இல்லாத உலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், ஜூன் 12-ம் தேதி 'குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்' கடைப்பிடிக்கப்படுகி றது.

பல்வேறு தொண்டு நிறுவனங் களும், சமுக ஆர்வலர்களும் போராடிவரும் நிலையிலும் பல்வேறு பரிணாமங்களில் குழந்தை தொழிலாளர் முறை அரங்கேறிக் கொண்டுதான் இருக் கிறது.

இதுகுறித்து கடலூர் மாவட்ட குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் துறை மேலாளர் ஜெய்சங்கரிடம் கேட்டபோது, "கடலூர் மாவட்ட மேற்கு பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின் றன. கடந்த மாதம் திட்டக்குடியில் 11 சிறுவர்களையும், வடலூரில் 3 சிறுவர்களையும் மீட்டு அவர்களை தொடர்ந்து கல்வி பயில நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி சிறுவர்களை தொழிலாளர் களாகப் பயன்படுத்தியிருந்தால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, சிறுவர்களின் பெயரில் குறிப்பிட்டத் தொகையை டெபாசிட் செலுத்த நடவடிக்கை மேற்கொள்வோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x