Published : 14 Sep 2019 08:29 AM
Last Updated : 14 Sep 2019 08:29 AM

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட 41 அணைகள்: பட்டியலிட்டு முதல்வருக்கு துரைமுருகன் பதில்

சென்னை

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணை களின் பட்டியலை முதல்வர் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் பொருளாளர் துரை முருகன் பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘நீர் மேலாண்மைக்கு திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன’ என்று முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கருணாநிதி முதல்வராகவும், நான் பொதுப்பணித் துறை அமைச்ச ராகவும் இருந்தபோது 1967 முதல் 2011 வரை 41-க்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டன.

தும்பலஹள்ளி, சின்னாறு, குண்டேரிப் பள்ளம், வறட்டுப்பள் ளம், பாலாறு, பொருந்தலாறு, வரதமா நதி, வட்டமலைக்கரை ஓடை, பரப்பலாறு, பொன்னியாறு, மருதா நதி, பிளவுக்கல் (பெரியாறு), கடானா, ராமாநதி, கருப்பாநதி, சித்தாறு-1, சித்தாறு - 2, மேல் நீராறு , கீழ் நீராறு, பெருவாரிப்பள்ளம், மோர்தானா, ராஜாதோப்பு, ஆண்டியப்பனூர் ஓடை, குப்பநத்தம், மிருகண்டா நதி, செண்பகத்தோப்பு, புத்தன், மாம் பழத்துறையார், பொய்கை, நல் லாறு, வடக்கு பச்சையாறு, கொடு முடி, அடவிநயினார், சாஸ்தா கோவில், இருக்கன்குடி, சென்னம் பட்டி, கிருதமால், நல்லதங்காள் ஓடை, நங்காஞ்சியார், வரட்டாறு வள்ளி மதுரை, பச்சைமலை, ஆனைவிழுந்தான் ஓடை என்று திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகளின் பட்டியலை முதல்வர் தெரிந்துகொள்ள வேண்டும்.

தூர்வாரும் பணிகள்

நதி நீர் இணைப்புத் திட்டங்களின் முன்னோடி திமுக ஆட்சிதான். தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம், காவிரி டெல்டாவில் 378 தூர்வாரும் பணிகள், காவிரி கட்டுமானங்களை சீரமைக்கும் 225 பணிகள், 3,117 ஏரிகள், 534 அணைகளை புதுப்பித்து 5,774 கி.மீட்டர் தொலைவுக்கு நீர் வரத்துக் கால்வாய்கள் அமைத்தது என்று பல்வேறு நீர்பாசனத் திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன.

2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் ரூ.62,349 கோடி முதலீடு களைப் பெற்று, அதன்மூலம் 2 லட்சத்து 35 ஆயிரத்து 464 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலும், அம்பத் தூர் முதல் காஞ்சிபுரம் வரை யிலும் நிறுவப்பட்டுள்ள தொழிற் சாலைகளே திமுக ஆட்சியின் சாதனைகளுக்கு சாட்சி.

திமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கை வெளியிட்டீர்களா என்று மு.க.ஸ்டாலினிடம் முதல்வர் பழனி சாமி கேட்டிருக்கிறார். 443 புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் போட்டு ரூ.5 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு வரப் போகிறது என்று அறிவித்துவிட்டு, இப்போது ரூ.14 ஆயிரம் கோடி மட்டுமே பெற்றுள்ள முதல்வர் பழனிசாமிதான் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி வெளியாகி இருக்கும் இந்த ரூ,14 ஆயிரம் கோடி விவகாரத்தை முதல்வரால் மறுக்க முடியுமா?

தொழில்துறை வீழ்ச்சி

வெளிப்படையான நிர்வாகத் திறமை, ஊழல் இல்லாமல் தொழிற்சாலைகளுக்கு விரை வாக அனுமதி போன்ற நேர்மை யான நடவடிக்கைகள் மூலம் முதலீட்டை வெகுவாகத் திரட்டி யது திமுக ஆட்சி. ஆனால், அதிமுக ஆட்சியில் தொழில் துறை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதிமுக ஆட்சியின் தோல்வியை மறைக்கவே திமுகவையும், மு.க.ஸ்டாலினையும் முதல்வர் பழனிசாமி விமர்சித்து வருகிறார். அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ள அதிமுக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பற்றியும், அவரது வெளிநாட்டுப் பயணங்கள் பற்றியும் விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை.

இவ்வாறு அறிக்கையில் துரைமுருகன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x