Published : 16 Jul 2015 08:17 AM
Last Updated : 16 Jul 2015 08:17 AM

டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய நாம் தமிழர் கட்சியினர் கைது

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத் தில் நேற்று டாஸ்மாக் மதுக் கடையை அடித்து நொறுக்கிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் கைது செய்த னர்.

திருச்சியில் நேற்று பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் பிரேம் ஆனந்த் தலைமையில், திருச்சி தென்மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் கோபி, திருச்சி வடகிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சரவணன், திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் விஜய், தென்மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முனியப்பன் மற்றும் மண்ணச்சநல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளரும் சட்டக் கல்லூரி மாணவருமான சிவா ஆகிய 5 பேர் சத்திரம் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கும், கடைக்காரர்களுக்கும் காமராஜர் பிறந்த நாளையொட்டி சாக்லேட் விநியோகித்தனர்.

பின்னர், திடீரென அவர்கள், அந்தப் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்குள் உருட்டுக் கட்டைகளுடன் புகுந்தனர். தமிழ கத்தில் முழு மதுவிலக்கை அமல் படுத்த வேண்டும் என்று 6 பேரும் முழக்கமிட்டுக்கொண்டே, கடைக் குள் மதுபான பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஓர் அடுக்கை கீழே தள்ளிவிட்டனர். இதில், அடுக்கி லிருந்த மதுபான பாட்டில்கள் கீழே விழுந்து நொறுங்கின.

மேலும், உருட்டுக் கட்டையால் மற்ற அடுக்கிலிருந்த மதுபான பாட்டில்களை அவர்கள் அடித்து நொறுக்கினர். அவர்களில் சிலர், அட்டைப் பெட்டியுடன் மதுபான பாட்டில்களை தூக்கி வந்து கடை முன் தரையில் வீசி நொறுக்கினர். இதனால், அந்தப் பகுதி முழுவதும் மதுபான நெடி வீசியது. கடையின் முன்புறம் மதுபான பாட்டில்கள் உடைந்து சிதறிக் கிடந்தன.

தகவலறிந்து வந்த கோட்டை போலீஸார், மதுக்கடையை அடித்து நொறுக்கிய பிரேம் ஆனந்த், கோபி, சரவணன், விஜய், முனியப்பன், சிவா ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

முன்னதாக, இதுதொடர்பாக பிரேம் ஆனந்த், கோபி ஆகிய இருவரும் கூறும்போது, “ஊரெங் கும் காமராஜர் பள்ளிகளைத் திறந்தார். ஆனால், தமிழக அரசு மதுக்கடைகளை திறந்துவைத்து, சமூகத்தைச் சீரழித்து வருகிறது. எனவே, அவரது பிறந்த நாளில் தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்களது போராட்டம் குறித்து கட்சித் தலைமைக்குக்கூட தெரியாது. ஆனால், எங்களைப் பின்பற்றி எங்கள் அண்ணன்மார்கள் இது போன்ற போராட்டத்தைத் தொடர வேண்டும்” என்றனர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நேற்று டாஸ்மாக் மதுக் கடையை அடித்து நொறுக்கிய நாம் தமிழர் கட்சியினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x