Published : 21 Jul 2015 08:42 AM
Last Updated : 21 Jul 2015 08:42 AM

4 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் உறவினர்கள் 6 பேர் கைது

சிவகங்கை அருகே கிளாதரியில் வசித்துவந்த வீரணன் மனைவி சங்கிலி என்கிற சங்கியம்மாள்(70), அவரது மகள் முத்தம்மாள்(56), இவரது மகன்கள் பொறியியல் பட்டதாரி பொன்னுசாமி(25), ஐடிஐ படித்த லட்சுமணன் ராஜா(22) ஆகிய 4 பேரையும், கடந்த 13-ம் தேதி இரவு மர்மக்கும்பல் தாக்கி கொலை செய்து தீயிட்டு எரித்தனர்.

போலீஸ் விசாரணையில் சங்கியம்மாளின் உறவினர்களே இக்கொலைகளை செய்தது உறுதியானது.

இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறியது:

சங்கியம்மாளின் சொத்தை வீரணனின் இளைய தாரத்து மகன்கள் முத்தையா, முத்துப் பாண்டி ஆகியோரிடம் இருந்து கோனார்பட்டியைச் சேர்ந்த உறவினர் கட்டப்பெருமாள் தரப்பினர் இரண்டரை ஏக்கருக்கு பதிலாக ஐந்து ஏக்கர் என ஏமாற்றி எழுதி வாங்கியுள்ளனர். இந்த நிலத்தில் தனது பாக சொத்தை தருமாறு சங்கியம்மாள் தரப்பினர் தகராறு செய்துள்ளனர். ஆனால், நிலத்துக்குரிய பணத்தை தருவதாக கட்டப்பெருமாள் கூறியும், அவர்கள் கேட்கவில்லை.

இதற்கிடையே, கட்டப் பெருமாள், அவரது மகன் கண்ணாமணி ஆகிய இருவரும், கடந்த ஆண்டு விபத்திலும், கட்டப்பெருமாளின் மனைவி காளி யம்மாள் உடல்நலக் குறைவாலும் அடுத்தடுத்து இறந்தனர்.

இதில் சங்கியம்மாள் செய்த செய்வினையால் கட்டப்பெரு மாள் வீட்டில் தொடர் மரணம் நடப்பதாக நம்பியுள்ளனர். எனவே சங்கியம்மாள் உயிருடன் இருந் தால், தங்களது குடும்பத்தில் மேலும் தொடர் இறப்புகள் ஏற்படும் எனக் கருதிய கட்டப் பெருமாளின் மகன்கள் பாக்கிய ராஜ்(32), கிருஷ்ணன் (35), மகள் பொட்டையம்மாள்(38), மருமகன் ராமன்(40) ஆகியோர் சங்கியம் மாள் குடும்பத்தினரை கொலை செய்யத் திட்டமிட்டனர்.

இதற்காக இறந்த கண்ணா மணியின் நண்பரும், ரவுடியுமான மதயானையை(40), அவரது உறவினரான ராக்காயி(39) மூலம் அணுகினர். இவர்கள் அனைவரும் சேர்ந்து, கடந்த 13-ம் தேதி இரவு சங்கியம்மாள் குடும்பத்தினர் அனைவரையும் கட்டையால் தாக்கி கொலை செய்து தீயிட்டு எரித்ததாக, அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதன்படி கட்டப்பெருமாளின் மற்ற மகன்கள் பாக்கியராஜ், கிருஷ்ணன், மகள் பொட்டை யம்மாள், மருமகன் ராமன், ரவுடி மதயானை, உறவினர் ராக்காயி ஆகிய ஆறு பேரையும் பூவந்தி போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x