Published : 07 Jul 2015 07:24 AM
Last Updated : 07 Jul 2015 07:24 AM

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் அதிகரித்துவரும் குடிநீர் தட்டுப்பாடு: ஆட்சியர் உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தல்

திருக்கழுக்குன்றம் பேரூராட்சியின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, தனியார் கிணற்றில் இருந்து தண்ணீர் பெற மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கிய பிறகும் அதற்கான பணிகள் தொடங் கப்படவில்லை. இதனால் நாளுக்கு நாள் குடிநீர் தட்டுப்பாடு அதி கரித்து வருவதாக புகார் தெரி வித்துள்ள பொதுமக்கள் நேற்று மதுராந்தகம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருக் கழுக்குன்றம் பேரூராட்சியின் குடிநீர் தேவைக்காக, வல்லி புரம் கிராமத்தில் உள்ள பாலாற் றில், திறந்தவெளி கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்படு கிறது. தற்போது பேரூராட்சிக்கு தினந்தோறும் 21 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை உள்ளது. பருவ மழை பொய்த்ததாலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததாலும், இந்த கிணறுகளில் நீர் சுரப்பு குறைந்து, வெறும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே கிடைக்கிறது.

இதனால், திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யும் நிலை உள்ளது. குடிநீர் தேவையை சமாளிக்க, சேரான் குளம் பகுதியில் தனியார் ஒரு வருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து தண்ணீர் பெற முடிவு செய்யப்பட்டது. பொதுமக்கள் நலன் கருதி இலவசமாக தண்ணீர் தர சம்பந்தப்பட்ட நபரும் ஒப்புக் கொண்டார்.

தனியார் கிணற்றிலிருந்து பேரூ ராட்சியின் குடிநீர் குழாய்களுக்கு இணைப்பு வழங்க, தொண்டு நிறுவனம் ஒன்று ரூ.3 லட்சம் நிதி வழங்கியுள்ளது. குழாய் களை புதைப்பதற்கான பள்ளம் தோண்டும் செலவை பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஏற்று கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து பேரூராட்சி மன்ற கூட் டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, வருவாய்த் துறைக்கு சொந்தமான கால்வாயில் குடிநீர் குழாய் புதைக்கும் பணி கள் தொடங்கின. இதற்கு, பேரூராட்சி பகுதி அதிமுக நகரச் செயலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால், பேரூராட்சி தலைவர் கிருஷ்ண வேணி தலைமையில், குடிநீர் பணிகளை தொடங்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சி யரும், கடந்த 22-ம் தேதி இதற்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.

ஆனால், 15 நாட்கள் கடந்த பின்னரும் பேரூராட்சி நிர்வாகம் பணிகளைத் தொடங்கவில்லை. இதனால், திருக்கழுக்குன்றத்தில் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 10 நாட்களுக்கு ஒருமுறையாவது குடிநீர் வழங்க கோரி 15-வது வார்டின் நாவலூர் பகுதிவாசிகள், திருக்கழுக்குன்றம்-மதுராந்தகம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதி சுயேச்சை கவுன்சிலர் ரவி, ‘குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, பேரூராட்சி நிர்வாகம் சரியான நடவடிக்கை மேற் கொள்ளவில்லை’ என குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் கூறியதாவது: தனியார் கிணற்றில் இருந்து குடிநீர் பெறும் பணிகளைத் தொடங்க உத்தர விடப்பட்டது. ஆனால், உத்தரவு அமல்படுத்தப்படாமல் இருப்பது குறித்து பேரூராட்சி துணை இயக்குநரிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x