Published : 20 Jul 2015 08:19 AM
Last Updated : 20 Jul 2015 08:19 AM

பொது தகவல் அலுவலர்கள் இல்லாததால் அரசு அலுவலகங்களில் தகவல் பெற முடிவதில்லை: சமூக ஆர்வலர்கள் வேதனை

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பொது தகவல் அலுவலர்கள் நியமிக்கப்படாததால், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களுக்கு பதில் கிடைப்பதில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரி வித்துள்ளனர்.

தகவல் உரிமைச் சட்டம் கடந்த 2005-ம் ஆண்டு இயற்றப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு அரசு துறை களிலும் பொது தகவல் அலுவலர் நியமிக்கப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில், பல அரசு துறைகளில் பொது தகவல் அலுவலர் நியமிக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, ஆவடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தரணிதரன் கூறியதாவது: ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலை குறித்து சில தகவல்கள் கோரி ஆவடியில் செயல்படும் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்துக்கு தபால் அனுப் பினேன். பொது தகவல் அலுவலர், நெடுஞ்சாலை பிரிவு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, அம்பத்தூர் உட்கோட்டம், ஆவடி, சென்னை என்ற முகவரிக்கு கடந்த மாதம் 4-ம் தேதி பதிவு தபால் அனுப்பினேன். அந்தத் தபால் எனக்கே திருப்பி அனுப்பப்பட்டது.

இதுகுறித்து, அந்த அலுவல கத்தில் விசாரித்த போது பொது தகவல் அலுவலர் இல்லாத தால் தபால் திருப்பி அனுப்பப் பட்டதாக தெரிவித்தனர். மேற் கண்ட அலுவலகத்தில் பூந்த மல்லி நெடுஞ்சாலைத் துறை அலு வலகமும் செயல்பட்டு வருகிறது. அங்கும் பொது தகவல் அலுவலர் இல்லை என்று கூறினர்.

அரசு அலுவலகங்களில் பொது தகவல் அலுவலர் இல்லை எனில் அந்த அலுவலகத்தின் உயர் பதவியில் இருக்கும் அதிகாரி சம்பந்தப்பட்ட தபாலை வாங்க வேண்டும். ஆனால், பொது தகவல் அலுவலர் இல்லை என்பதைக் காரணம் காட்டி தபால்களை திருப்பி அனுப்புகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

இதேபோல், பட்டாபிராமைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பாபு கணேஷ் என்பர் கூறியதாவது: தபால் துறையில் சில தகவல்களை பெற ஆவடி தலைமை அஞ்சல் நிலையத்துக்கு தபால் அனுப்பி னேன். அந்த தபால் திரும்பி வந்துவிட்டதால், சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு கடிதம் அனுப்பினேன்.

முழுமையான விலாசம் இல்லை எனக் கூறி கடிதத்தை திருப்பி அனுப்பி விட்டனர். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் சிக்கலை சந்திக்க நேரிடும் என்பதாலேயே அதிகாரி கள் இத்தகைய கடிதங்களை வாங்காமலேயே திருப்பி அனுப்பி விடுகின்றனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, பெரும்பாலான மாவட்டங் களில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் பொது தகவல் அலுவலர் பணியிடங்கள் நிரப்பப் படாமலேயே உள்ளன. இதனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் மனுக்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்பினால்தான் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்’’ என்றார்.

இதுகுறித்து, ஆவடி தலைமை தபால் நிலைய வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஆவடியில் உள்ள தலைமை தபால் நிலை யத்தில் பொது தகவல் அலு வலர் இல்லை. எனவே, சென் னையில் உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு அனுப்பி வைக் கும்படி அறிவுறுத்துகிறோம். பாபு கணேஷ் என்பவர் அனுப்பிய கடிதத்தில் தகவல் பெறும் அலுவலரின் முகவரி முழு மையாக குறிப்பிடாததால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x