Published : 20 Jul 2015 08:34 AM
Last Updated : 20 Jul 2015 08:34 AM

கால்நடை மருத்துவப் படிப்பு: தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

கால்நடை மருத்துவப் படிப்புக ளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் சென்னை வேப்பேரி, திருவள்ளூர் மாவட்டம் கொடுவள்ளி உட்பட 6 இடங்களில் கல்லூரிகள் உள்ளன. கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச்.), பி.டெக். உணவுத் தொழில்நுட்பம், பி.டெக். கோழி உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் பி.டெக். பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் சுமார் 18 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இந்நிலையில் மாணவ, மாணவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று மாலை 4 மணிக்கு சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் வெளியிடப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x