Published : 02 Jul 2015 08:23 AM
Last Updated : 02 Jul 2015 08:23 AM
மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் எஸ்.சி., எஸ்.டி மாணவர்களின் உயர் கல்விக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டத்துக்கு முரணாக மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தனியார் கல்லூரிகள் மீது புகார் எழுந்துள்ளது.
எஸ்.சி., எஸ்.டி மாணவர்களின் கல்லூரிக் கட்டணம் முழுவதையும் ஆதிதிராவிடர் நலத்துறையே ஏற்றுக் கொள்ளும் திட்டம் கடந்த நான்கு ஆண்டுகளாக நடை முறையில் உள்ளது. ஆனால், இத்திட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் தனியார் கல்லூரிகள் மாணவர்க ளிடமே கல்விக் கட்டணத்தை வசூலிப்பதாக கூறுகிறார் கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மா.ராஜ்குமார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தப் பிரிவுக்குள் வரும் மாணவர் கள் ஒரு ரூபாய்கூட கல்விக் கட்டணம் செலுத்த வேண்டிய தில்லை. கல்விக் கட்டணம் தொடர்பாக நீதியரசர் என்.வி.பால சுப்ரமணியன் கமிட்டி நிர்ணயம் செய்துள்ள விகிதப்படியே, அரசு கல்விக் கட்டணத்தை வழங்கும் என்பதால் சில கல்லூரிகள் அரசிடம் கட்டணம் வசூலிக்காமல் மாணவர்களிடமே தங்கள் இஷ்டப்படி கல்விக் கட்டணத்தை வசூலிக்கின்றன. ஒரு சில கல்லூரிகளில் இத்திட்டம் எங்களுக்கு பொருந்தாது என்கிறார்கள். இதனால், அரசிடம் கல்விக் கட்டணம் பெற முழுத் தகுதி இருந்தும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் வங்கிகளில் கல்விக் கடனுக்கு அலைகிறார்கள். வங்கி களுக்கும் இத்திட்டம் குறித்த புரிதல் இல்லாததால் இவர்க ளுக்கும் கல்விக் கடனை வழங்கு கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலக வட்டாரங்களில் விசாரித்தபோது, “தனியார் கல்லூரி கள் தங்களிடம் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பதாக சம்பந்தப் பட்ட மாணவர்கள் எங்களிடம் புகார் தெரிவிக்கத்தான் செய்கி றார்கள். அதுபோன்ற நேரங்களில் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாக த்தை தொடர்பு கொண்டு எச்சரிக் கிறோம். ஆனாலும் புகார்கள் நிற்கவில்லை’’ என்றார்கள்.
அத்துறையின் கல்வி உதவித் தொகை பிரிவின் கண்காணிப் பாளர் ரேணுகாவிடம் கேட்டபோது, “இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த 2013-14ல் 6,81,855 மாணவர் களுக்கு ரூ.897.5773 கோடி கல்வி மற்றும் பராமரிப்புக் கட்டணமாக வழங்கப் பட்டுள்ளது. கல்விக் கட்டணமாக மட்டும் 2014-15ல் 4,171 கல்லூரி களைச் சேர்ந்த 4,80,083 மாணவர் களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெறும் மாணவர்க ளிடம் திருப்பிச் செலுத்தப்படாத எவ்வித கட்டணத்தையும் கல்வி நிறுவனங்கள் வசூலிக்கக் கூடாது. இதையும் மீறி கல்வி நிறுவனங்கள் செயல்பட்டால் தாமதமின்றி எங்க ளிடம் புகார் தெரிவிக்கலாம்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT