Published : 27 Aug 2019 10:02 AM
Last Updated : 27 Aug 2019 10:02 AM
ந.முருகவேல்
விருத்தாசலம்
விழுப்புரம் மாவட்டத்தை இரண் டாகப் பிரித்து, புதிதாக கள்ளக் குறிச்சி மாவட்டம் கடந்த ஜனவரி 8-ம் தேதி அறிவிக்கப்பட்டு, அரசாணை யும் வெளியிடப்பட்டது. இதைய டுத்து தமிழகத்தில் 33-வது மாவட் டமாக கள்ளக்குறிச்சி உதயமானது.
வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தலைமையில் புதிய மாவட்டத்திற்காக விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள வருவாய் கிராமங்களை பிரிப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாவட்ட எல்லை வரையறுப்பது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான தனி அதிகாரியாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலா ளராக பணியாற்றி வந்த கிரண் குராலாவை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்தது.
தற்போது கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் பிரிப்பதற்கான நடவடிக் கைகள் தொடங்கியுள்ளன. இதற் கான பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள கிரண் குரலா கடந்த ஜூலை 25-ம் தேதி கள்ளக் குறிச்சிக்கு வந்திருந்து, சார் ஆட்சி யர் காந்தை சந்தித்தார்.
பின்னர் தனி அதிகாரிக்கான அலுவலக இடம் தேர்வு தொடர் பாக கள்ளக்குறிச்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், கள்ளக்குறிச்சி நகராட்சி, பொதுப்பணித்துறை அலு வலகம், ஊராட்சி ஒன்றிய அலுவ லகம், உலகங்காத்தான் டெக்ஸ் டைல் மில், பெருவங்கூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அலுவலகம் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார். இதையடுத்து தற்காலிக ஆட்சியர் அலுவலக இயங்குமிடம், புதிய ஆட்சியர் அலுவலகத்திற்காக தேர்வு செய்யப் பட்ட இடம், காவல் கண்காணிப் பாளர் அலுவலக இடம் குறித்து முதல்வர் பிரிவுக்கு பரிந்துரைத் துள்ளார்.
செப்டம்பர் மாதம் முதலே கள்ளக் குறிச்சி மாவட்டம் தனித்து இயங்குவ தற்கான நடவடிக்கைகளை கிரண் குரலா மேற்கொண்டபோதிலும், பொதுப்பணித்துறையினரின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால், கள்ளக்குறிச்சி மாவட்டம் தனித்து இயங்குவது தாமதமாகி வருவதாக வருவாய் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக வட்டாட்சியர் நிலையில் உள்ள அலுவலரிடம் பேசிய போது," புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி அறிவிக்கப்பட்ட நிலையில், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி ஆகிய இரு வரு வாய் கோட்டங்களும், உளுந்தூர் பேட்டை, சங்கராபுரம், திருக்கோ விலூர், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் என 5 வருவாய் வட்டங்களும், 523 வருவாய் கிராமங்களும் கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் இடம் பெறும் வகையில் மாவட்டம் பிரிக்கப்பட் டுள்ளது.
விழுப்புரம் - கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ள கண்டாச்சிபுரம் வட்டத்தில் சில வருவாய் கிராமங்களை கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் இணைப்பது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. அதேபோன்று உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள சில கிராமங்களை பிரித்து, திருவெண்ணைநல்லூர் வட்டத்தை உருவாக்கி, அதை விழுப் புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அப்பகுதி மக்களால் வைக்கப் பட்டுள்ளது. இதில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் என 5 சட்டப் பேரவைத் தொகுதிகளும் கள்ளக் குறிச்சி மாவட்டத்திற்குள் வருகின் றன. இந்த புதிய மாவட்டத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள தனி அதிகாரி கிரண் குரலா இலக்குப் படி, செப் டம்பர் 1 முதல் மாவட்டம் தனித்து இயங்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இருப்பினும் பொதுப்பணித்துறையினர் ஒத்துழைப்பு சரிவர இல்லாததால் தாமதமாகி வருகிறது.
மாவட்டம் இயங்கினால் தான் எங்களது அலைச்சல் மிச்சமாகும் என்பது ஒருபுறம் என்றாலும், எங்க ளது பதவி உயர்வு விரைந்து நடைபெறும். எனவே மாவட்டம் தனித்து இயங்குவதில் நாங்களும் ஆர்வத்தோடும் தான் செயல்படு கிறோம் என்று அதிகாரிகள் தெரிவிக் கின்றனர். தற்போதைய சூழலில் தற் காலிக ஆட்சியர் அலுவலகமாக கள்ளக்குறிச்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தை தேர்வு செய்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மற்ற துறைகளுக்கான மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் கள்ளக்குறிச்சி சுங்கச்சாவடி அருகே வீரசோழபுரத்தில் அமைய வாய்ப்புள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் மாவட்டம தனித்து இயங்கு வதற்கான வாய்ப்பும் உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.அக்டோபர் 1-ம் தேதி முதல் மாவட்டம் தனித்து இயங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment