Published : 17 Jul 2015 08:47 AM
Last Updated : 17 Jul 2015 08:47 AM

பல்கலை. ஆராய்ச்சியின் பயன்பாடுகள் மக்களைச் சென்றடைய வேண்டும்: துணைவேந்தர் ஆர்.தாண்டவன் வலியுறுத்தல்

ஆராய்ச்சியின் பயன்பாடுகள் பொது மக்களைச் சென்றடைய வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன் கூறியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகம் சார்பில் ‘சதுப்பு நிலக் காடுகளும், பருவநிலை மாற்றமும்’ என்ற தலைப்பிலான 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் பல்கலைக் கழகத்தின் கிண்டி வளாகத்தில் நேற்று தொடங்கியது. துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.தாண் டவன் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

முந்தைய காலத்தில் குளம் குட்டை தண்ணீரைப் பயன்படுத்தி சிறந்த முறையில் விவசாயம் செய்துவந்தனர். ஆனால், இப்போது அவையெல்லாம் மறைந்துவிட்டன. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் (அலையாத்திக் காடுகள்) அழிந்து வருகின்றன. தட்பவெட்பநிலை மாறுபாடுதான் இதற்கு காரணம். எனவே, இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

முன்பு நிலவிய தட்பவெட்ப நிலையில் இருக்கின்ற சதுப்புநில காடுகள் புதிய தட்ப வெட்பநிலையைத் தாக்குபிடிக்கப் பிடிக்க முடியுமா? சுனாமி பாதிப்பை தடுக்கக்கூடிய சதுப்பு நில காடுகளைப் பாதுகாப்பதில் தற்போது வந்துள்ள வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) உதவியுடன் சென்னை பல்கலைக்கழகத்தில் அமைக்கப் பட்டுள்ள ஆராய்ச்சி மையம் ஆய்வு செய்து வருகிறது.ஆராய்ச்சியின் பயன்பாடுகள் பொது மக்களைச் சென்றடைய வேண்டும் என்று அவர் பேசினார். முன்னதாக, பல்கலைக்கழக நிலத்தியல் துறையின் தலைவர் எஸ்.ராமசாமி வரவேற்றார். கருத்தரங்க அமைப் பாளரும், பயன்பாட்டு நிலத்தியல் துறையின் தலைவருமான ஆர்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, இணை பேராசிரியர் எம்.ஜெயபிரகாஷ் ஆகியோர் அறிமுகவுரை ஆற்றினர். கிண்டி வளாக இயக்குநர் எஸ்.மன் நாராயணன் உள்ளிட்டோர் பேசினர். நிறைவாக, புவியியல் துறையின் தலைவர் ஆர்.ஜெக நாதன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x