Published : 31 Jul 2015 08:28 AM
Last Updated : 31 Jul 2015 08:28 AM
கலாம் பெயரில் சமூக நல்லிணக்க தேசிய விருதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
ராமேசுவரத்தில் அப்துல் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு தொல்.திருமா வளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா உலக அரங்கில் வல்லரசாக திகழ்வதற்கு அப்துல் கலாமின் பணி மகத்தானது. மாணவர்களையும், இளைஞர்களையும் இந்த தேசத்தின் மீது பற்றுள்ளவர்களாக வளர்ப்பதில் அவர் கவனம் செலுத்தினார்.
அவர் நல்லடக்கம் செய்யப்படும் அதே நாளில், யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகத்தான் கருதவேண்டியுள்ளது.
அனைத்து ஜாதி, மதம், மொழி, இனங்களைக் கடந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர் கலாம். அவரது பெயரில் சமூக நல்லிணக்க தேசிய விருதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதை ஆண்டுதோறும் சமூக நல்லிணக்கத்துக்காக பாடுபடுபவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது அறிவித்த ‘புரா’ என்கிற செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT