Published : 23 Aug 2019 02:26 PM
Last Updated : 23 Aug 2019 02:26 PM
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் துப்பாக்கி ஏந்தி, போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தினுள் தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாகக் கூறப்படுவதால், அம்மாவட்டம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதி என்பதால், தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் ஊடுருவ வாய்ப்புள்ளதாக போலீஸார் கருதுகின்றனர். எனவே, சுற்றுலாத் தலங்களில் துப்பாக்கி ஏந்தி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உதகை, அரசு தாவரவியல் பூங்காவில் கடும் சோதனைக்குப் பின்னரே சுற்றுலாப் பயணிகள் பூங்காவில் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், மாவட்டத்தின் எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர வாகனத் தணிக்கைக்குப் பின்னரே சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்தினுள் அனுமதிக்கப்படுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT