Published : 04 May 2014 10:38 AM
Last Updated : 04 May 2014 10:38 AM

மருத்துவப் படிப்பு விண்ணப்ப விநியோகம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2014-15ம் ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விற்பனை தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக அண்ணாமலை பல்கலைக்கழகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 2014-15ம் ஆண்டு மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கையேடு மற்றும் விண்ணப்பம் விற்பனை தொடங்கியுள்ளது. விற்பனையை அண்ணாமலை பல்கலை. நிர்வாகியும் தமிழக அரசின் முதன்மைச் செயலாளருமான சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் தொடங்கிவைத்தார். இதில் பதிவாளர் முனைவர் பஞ்சநாதம், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

வரும் ஜூன் 10-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பங்களை அண்ணாமலை நகரில் உள்ள பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் அனைத்து படிப்பு மையங்களிலும் ரூ.1500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.அஞ்சல் மூலம் பெற விரும்புவோர் அஞ்சல் கட்டணத்துக்காக ரூ.50 ஐ கூடுதலாக சேர்த்து ரூ.1550க்கான வரைவோலையை பதிவாளர், அண்ணாமலை பல்கலைக்கழகம் என்ற பெயரில் எடுத்து பதிவாளர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்-608002 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். மருத்துவம், பல்மருத்துவம் ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானது.

மேலும் விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annamalaiuniversity.ac.in)தெரிந்துகொள்ளலாம். au_regr@ymail.com என்ற இமெயில் முகவரி அல்லது 04144-238348, 238349 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்புகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 11-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x