Published : 19 Aug 2019 09:41 AM
Last Updated : 19 Aug 2019 09:41 AM

துறையூர் அருகே கோயிலுக்கு சென்றபோது பரிதாபம்; மினிவேன் கிணற்றுக்குள் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு: படுகாயத்துடன் மீட்கப்பட்ட 9 பேருக்கு தீவிர சிகிச்சை

துறையூர் அருகே நேற்று கிணற்றுக்குள் விழுந்த மினிவேன், கிரேன் மூலம் மீட்கப்படுகிறது.

திருச்சி

துறையூர் அருகே 80 அடி ஆழ கிணற்றுக்குள் மினிவேன் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். படுகாயத்துடன் மீட்கப்பட்ட 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டம் முசிறி அரு கேயுள்ள பேரூரைச் சேர்ந்தவர் குணசீலன்(75). சிறைத் துறையில் வார்டனாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று சிறுநாவ லூர் புதூரிலுள்ள அழகு நாச்சியம் மன், கருப்பசாமி கோயில் முப்பூசை கிடா வெட்டு நிகழ்ச்சியில் பங்கேற் பதற்காக, தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 16 பேருடன் மினிவேனில் புறப்பட்டார். பேரூர் அம்மன் தெருவைச் சேர்ந்த தங்கராசு மகன் இளையராஜா(35), மினிவேனை ஓட்டிச் சென்றார்.

துறையூர் அருகேயுள்ள எரகுடி- திருமானூர் இடையே சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன், அங்கிருந்த இரும்புத் தடுப்பு ஒன்றில் மோதி, சாலையோரத்தில் இருந்த 80 அடி ஆழமுள்ள கிணற் றுக்குள் கவிழ்ந்தது. கிணற்றின் அடிப்பகுதியில் முழங்கால் அள வுக்கு நீர் இருந்த நிலையில், கிணற்றுக்குள் விழுந்தவர்களை மினிவேனும் நசுக்கியது. இதனால், படுகாயமடைந்த அனைவரும் கூச்சலிட்டனர்.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஓடிவந்து, அவர்களை மீட்க முயற் சித்தனர். ஆனால், கிணற்றின் ஆழம் அதிகமாக இருந்ததால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. தகவலறிந்த துறை யூர் தீயணைப்பு நிலைய வீரர்களும், உப்பிலியபுரம் போலீஸாரும் அங்கு சென்று, மீட்புப் பணிகளில் ஈடுபட் டனர். மாவட்ட ஆட்சியர் சு.சிவ ராசு, எஸ்.பி ஜியாவுல்ஹக், எம்எல்ஏ ஸ்டாலின்குமார் உள்ளிட் டோர் அங்கு சென்று மீட்புப் பணி களை துரிதப்படுத்தினர்.

அப்போது, காயங்களுடன் அவதிப்பட்டுக் கொண்டிருந்த பேரூரைச் சேர்ந்த தனபால் மகள் ரோசிகா(13), மகன் சுகந்தன்(12), இளங்கோவன்(46), அவரது மனைவி முத்துக்கண்ணு(42), மகள் லாவண்யா(13), சத்தியசீலன் மனைவி பூங்கொடி(50), ஆட்டோ ஓட்டுநர் இளையராஜா(35), சிறு நாவலூர் அருகேயுள்ள கட்டப்பள் ளியைச் சேர்ந்த முருகேசன் மகன் ஹரிஷ்(5), பழனிவேல் மனைவி சரஸ்வதி(46) ஆகியோரை மீட்டு திருச்சி, முசிறி, துறையூரிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், மினிவேனுக்கு அடியில் சிக்கி இறந்துகிடந்த பேரூரைச் சேர்ந்த குணசீலன்(75), இவரது மனைவி எழிலரசி (60), ஞானசீலன் மனைவி குமரத்தி(52), தனபால் மனைவி கோமதி(40), சிறுநாவலூர் கட்டப்பள்ளியைச் சேர்ந்த முருகேசன் மனைவி கயல்விழி(27), மகள் சஞ்சனா(4), இளங்கோவன் மகன் சரண்குமார்(6), மகள் யமுனா (10) ஆகியோரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து முசிறி டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு செய்தியாளர் களிடம் கூறியபோது, “ஓட்டுநர் கவ னக்குறைவாகவும், அதிவேகமாக வும் மினிவேனை ஓட்டி வந்ததால், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி வழங்க பரிந் துரைக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x