Published : 25 Jul 2015 08:47 AM
Last Updated : 25 Jul 2015 08:47 AM
கடலூர் பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதை சிறு புத்தகமாக வெளியிட திமுக இளைஞர் அணி திட்டமிட்டுள்ளது. மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் பிரதிகள் வீதம் கட்சியின் 64 மாவட்டங்களுக்கும் சுமார் 16 லட்சம் பிரதிகளை பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடம் இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
மதுரை, கடலூருக்கு அடுத்த படியாக, கொங்கு மண்டலத்தில் நீதிகேட்கும் பேரணி, பொதுக் கூட்டத்தை செப்டம்பரில் நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகி றோம். கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட திமுகவினர் கலந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று கோவை வந்த மாநில இளைஞரணி துணைப் பொதுச் செயலாளர் மகேஷ் பொய்யா மொழி, காங்கேயம் அல்லது பெருமாநல்லூரில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கான இடங் களைப் பார்வையிட்டுச் சென்றுள் ளார். மாநாட்டு இடம் இதுவரை முடிவு செய்யப்படவில்லை.
இலவச பிரதி
இதற்கிடையே, தமிழகம் முழுக்க உள்ள மாவட்ட இளை ஞரணியினருக்கு கடலூர் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் நிகழ்த்திய உரை அடங்கிய சிறு பிரசுரங்களை விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற் கேற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள இளைஞர் அணி அமைப்பாளர் ரூ.1.50 லட்சத்தை இளைஞரணி அறக்கட்டளையில் செலுத்தி, 25 ஆயிரம் புத்தகங் களை பெற்றுக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கட்சியின் 64 மாவட்டங்களுக்கும் சேர்த்து கிட்டத்தட்ட 16 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, வரும் 29-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைமை அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT