Published : 16 Aug 2019 10:43 AM
Last Updated : 16 Aug 2019 10:43 AM
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கத்தை வரவேற்று கன்னியாகுமரியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி முந்தா. இவர் அங்கு பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்தும் ஒரே நாடு ஒரே கொடி என்ற கோஷத்தை முன்னிறுத்தியும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 5200 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இவர் விருதுநகர் வந்தடைந்தார். அப்பொழுது அவருடன் மகாத்மா காந்தி நேரு உள்ளிட்ட தேச தலைவர்களின் வேடமணிந்து 12 இளைஞர்களும் உடன் வந்தனர்.
இதுகுறித்து ஆசிரியர் ராஜலட்சுமி முந்தா கூறியபோது, "மத்திய அரசின் சிறப்பான நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்து காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு வரவேற்பு அளிக்கும் விதமாகவும் ஒரே நாடு ஒரே கொடி என்பதை வலியுறுத்தியும் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.
கடந்த 15-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இப்பயணத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
செப்டம்பர் 1 -ம் தேதி காஷ்மீரில் இப் பயணத்தை நிறைவு செய்கிறேன்.
வழி நெடுகிலும் மத்திய அரசின் நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறியும் ஒரே நாடு ஒரே கொடி என்ற கொள்கையையும் வலியுறுத்தி வருகிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT