Published : 19 Jul 2015 11:08 AM
Last Updated : 19 Jul 2015 11:08 AM

19 கிலோ நகை திருடிய வழக்கில் கைதான கோபாலகிருஷ்ணனுக்கு மீண்டும் போலீஸ் காவல்: சென்னை போலீஸார் விசாரணை

புதுக்கோட்டை - குளத்தூர் வங்கி யில் 19 கிலோ நகை திருடப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள கோபால கிருஷ்ணனை, வேறொரு வழக்கு தொடர்பாக காவலில் எடுத்து, சென்னை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளத்தூர் சிட்டி யூனியன்வங்கி யில் 2014 நவம்பர் 30-ம் தேதி 19 கிலோ நகை திருடப்பட்ட வழக்கில் கோபாலகிருஷ்ணன், அழகிரிசாமி , ஆனந்தகுமார் ஆகிய மூவரையும் கீரனூர் போலீஸார் கைது செய்தனர்.இவர்களிடம் இருந்து முதலில் 5 கிலோ தங்கம், ரூ.1.5 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் 100 பவுன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், சென்னை செம்பி யம் பகுதியில் கடந்த 2013-ல் 3 கிலோ நகை திருடுபோயுள் ளது. இந்த 2 சம்பவமும் ஒரே மாதிரி இருப்பதால், செம்பியம் சம்பவத்திலும் கோபாலகிருஷ் ணனுக்கு தொடர்பிருக்கலாம் என செம்பியம் போலீஸார் கருதினார். எனவே திருச்சி சிறையில் இருந்த கோபாலகிருஷ்ணனை கடந்த 16-ம் தேதி முதல் போலீஸ் காவலில் எடுத்தனர்.

கடந்த 2013-14ம் ஆண்டுகளில் கீரனூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் கோபாலகிருஷ்ணன் பெயரில் நகை அடகு வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கின்ற னர். மேலும் 20-ம்தேதி வரை விசாரணை நடைபெற உள்ள தாகவும், அப்போது முழு விவரம் தெரியவரும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x